webdunia photoWD கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் செளபர்நிகா நதிக்கரையில் அமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடக் கலையின் அழகம்சத்துடன் கூடிய தாய் மூகாம்பிகை திருக்கோயில். கர்நாடகம் மட்டுமின்றி, நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாய் மூகாம்பிகையின் சக்தியை உணர்ந்து பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கி்ன்றனர். விஜயதசமி இத்திருக்கோயிலில் வித்யாதசமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தங்களுடைய குழந்தையின் கல்வியை இத்திருத்தலத்திற்கு வந்து தாய் மூகாம்பிகையை வணங்கியே துவக்கி வைக்கின்றனர்....