நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் முதன்மையானதும ், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வழிபடும் புகழ்பெற்ற புனிதத்தலமாகவும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்ன ்- உத ்- தீன் சிஸ்தியின் தர்காவாகும ்.
க்வாஜா மொய்ன ்- உத ்- தின் சிஸ்தி எனும் முஸ்லிம் ஞானி புதைக்கப்பட்ட இடமே இந்த தர்காவாகும ். இஸ்லாத்தை இந்தியாவில் வேரூன்றச் செய்த சூஃபி மகான்களில் மிகவும் பிரசித்திப் பெற்றவர ் மொய்ன ்- உத ்- தின் சிஸ்தி ஆவார ். இவரைப் பின்பற்றி ஏராளமான சூஃபி மகான்கள் தோன்றியுள்ளனர ். தங்களின் பக்தியாலும ், சேவைகளாலும ், அன்பாலும் சூஃபி மகான்கள் இஸ்லாத்தை பரப்புவதில் பெரும் பங்காற்றினர ்.
க்வாஜா மொய்ன ்- உத ்- தின் சிஸ்தி, 1190 முதல ் 1232 ல் தனது உடலை துறக்கும் வரை இங்குதான் வாழ்ந்தார ். அவர் புதைக்கப்பட்ட அந்தக் கல்லறையே வழிபாட்டிற்குரியதாகவும ், புனிதத்தத் தலமாகவும் திகழ்கிறத ு.
அவருடைய கல்லறையின் மீது வைக்கப்பட்டுள்ள கிரீடம் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனத ு. கல்லறையின் முன் பகுதியில் மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் ஒரு பெரும் மசூதியைக் கட்டியுள்ளார ்.
webdunia photo
WD
ஷாஜஹானுக்குப் பின் வந்த மொகலாயப் பேரரசர்கள் சிஸ்தியின் கல்லறையை மையமாக வைத்து இந்த தர்காவை கட்டி முடித்துள்ளனர ். ஒரு நேரத்தில் சாதாரண கல்லறை மட்டுமே இருந்த இவ்விடம ், இன்று பல மசூதிகளையும ், தங்குமிடங்களையும், வழிகளையும் கொண்ட மிகப் பெரிய கட்டுமாணமாக உருவாகியுள்ளத ு. ஹஸ்ரத ் க்வாஜா மொய்ன ்- உத ்- தீன் சிஸ்தி தர்காவிற்கு, தர்கா பஜார் என்ற சாலையின் வழியாகச் செல்ல வேண்டும ். தர்காவின் வாயில் கதவுகள் வெள்ளியால் கலை வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ன. மொய்ன ்- உத ்- தீன் சமாதியைச் சுற்றி வெள்ளியாலான வேலி அமைக்கப்பட்டுள்ளத ு. இங்கு பிரார்த்தனை செய்ய பெண்களுக்கு தனி அறை உள்ளத ு.
webdunia photo
WD
அஜ்மீர் தர்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்களும ், மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் பல லட்சக்கணக்கில் வந்துக்கொண்டேயிருக்கின்றனர ். இருந்தாலும் மொய்ன ்- உத ்- தீன் சிஸ்தியின் நினைவு நாளான உர்ஸ் தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர ். 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து மட்டுமின்ற ி, பாகிஸ்தான ், வங்கதேசத்தில் இருந்தும் மக்கள் வருகின்றனர ்.
அஜ்மீர் தர்காவிற்கு வந்து செல்லும் எவரும் வெறுங்கையுடன் திரும்புவதில்ல ை. அவர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறத ு. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் வெல்வெட் துணியாலான சத்தார் என்றழைக்கப்படும் சால்வையையும ், மலர்களையும், இத்ரா என்றழைக்கப்படும் வாசனை திரவியங்களையும ், சந்தன மரத்துண்டுகளையும் அவருடைய கல்லறையில் காணிக்கையாக்குகின்றனர ்.
webdunia photo
WD
கெளவால்ஸ் என்றழைக்கப்படுவோர் மொய்ன ்- உத ்- தீன் சிஸ்தியின் பெருமைகளை பாடல்களாக பாடுகின்றனர ். இங்கு வரும் பக்தர்களை கவனித்துகொள்ள காதீம்ஸ் என்பவர்கள் உள்ளனர ். காதீம்ஸ் என்றால் மகானின் சேவையாளர்கள் என்று பொருள ். ராஜஸ்தானிற்கு வரும் அனைவரும் அஜ்மீர் தர்காவிற்குச் செல்லாமல் திரும்புவதில்ல ை.
எப்பொழுது செல்லலாம ் : ஆண்டு முழுவதும் இத்திருத்தலத்திற்கு செல்லாம ்.
எப்படிச் செல்லலாம ் :
ரயில் மார்க்கம ் : இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் அஜ்மீருக்குச் செல்ல ரயில் வசதி உண்ட ு. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து டெல்லி செல்லும் மேற்கு ரயில்வேயின் பாதையில் அஜ்மீர் உள்ளத ு.
சாலை மார்க்கம ் : ராஜஸ்தான் தலைநகரில் ஜெய்ப்பூரில் இருந்த ு 135 க ி. ம ீ. தூரத்தில் உள்ளது அஜ்மீர ். ஜெய்ப்பூரில் இருந்து பேருந்து சேவைகள் உள்ளத ு. இதேபோ ல, ஜோத்பூரில் இருந்தும ் (198 க ி. ம ீ.), டெல்லியில் இருந்தும ் (335 க ி. ம ீ.) பேருந்து மூலமாக அஜ்மீர் செல்லலாம ். உர்ஸ் விழாவின் போது இந்தியாவின் எல்லா நகரங்களில் இருந்தும் அஜ்மீருக்கு சிறப்பு ரயில்களும ், பேருந்துகளும் இயக்கப்படுகின்ற ன.