Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாகாளீஸ்வரர் : 12 ஜோதி லிங்கங்களில் ஒன்று!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (17:17 IST)
webdunia photoWD
மஹாகாளீஸ்வரர் கோயில் சிவபெருமானின் புகழ்பெற்ற 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றாகும். உஜ்ஜெயின் மக்கள் தூஷன் எனும் அரக்கனால் பேரழிவிற்கு உள்ளாகி பரட்டைத் தலையுடன் திரியும் நிலை ஏற்பட்டபோது, அவர்கள் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் ஜோதியாகத் தோன்றினார். அந்த அரக்கனைக் கொன்றார். தனது பக்தர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அங்கு ஒரு ஜோதி லிங்கமாக எழுந்தருளினார்.

இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் மட்டுமே தெற்கை நோக்கியதாக உள்ளது. தந்த்ரா என்றழைக்கப்படும் கண்கட்டி வித்தைக்கு இந்தக் கோயில் மிகப் பிரபலமானதாகும்.

மஹாகாளீஸ்வரரை நோக்கி செய்யப்படும் பிரார்த்தனையை, வேத வியாசர், காளிதாஸ், பானபட்டர், போஜ் பேரரசர் ஆகியோர் செய்ததாக சில சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

பழமை வாய்ந்த இந்த மஹாகாளீஸ்வரர் கோயில் 11வது நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டதாகும்.

140 ஆண்டுகளுக்குப் பிறகு உஜ்ஜெயினைத் தாக்கிய சுல்தான் இல்டுட்மிஷ் இந்தக் கோயிலை தாக்கி சேதப்படுத்தியதாகவும், இப்பொழுதுள்ள இந்தக் கோயில் மராத்தா அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டதெனவும் கூறப்படுகிறது.

மராத்தா அரச வம்சத்தைச் சேர்ந்த பாபா ராம்சந்திர ஷைனமி என்பவர் திவானாக இருந்தபோது 250 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டது.

இங்குள்ள சிவ லிங்கத்திற்கு விபூதியால்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது..

webdunia photoWD
வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு, ஸ்தோத்திரங்கள் படிக்கப்பட்டு, இசைக் கருவிகளின் ஒலியுடன் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பஸ்ம ஆர்த்தி என்றழைக்கப்படும் இந்த விபூதி ஆராதனை நடைபெறுகிறது.

சிவலிங்கத்தை ஆராத்தி செய்யும்போது உங்களது உள்ளுணர்வு பாம் பாம் போலே என்ற சத்தத்துடன் எழுப்பபப்டுகிறது என்று கூறப்படுகிறது. சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய மனிதர்கள் வரை அனைவரும் இந்த ஆராத்தியில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

இது குறித்து புராணங்கள் கூறுவது :

webdunia photoWD
அந்தக் காலத்தில் இறந்தவர்களின் உடல்களை எரித்த சாம்பலைக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்பட்டதாம். ஒருமுறை இக்கோயிலின் பூசாரி ஒருவர் பிணம் எரித்த சாம்பல் கிடைக்காததால் தனது மகனையே எரித்து அந்தச் சாம்பலைக் கொண்டு ஆரத்தி செய்தாராம். அச்சம்பவத்திற்குப் பிறகு அந்தச் சடங்கு கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக பசுவின் சாணத்தை எரித்து எடுக்கப்படும் சாம்பலைக் கொண்டு மஹாகாளீஸ்வரருக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.

பஸ்ம ஆரத்தியின் போது கோயிலின் கர்ப்ப கிரகத்திற்கு அருகே சாதாரண ஆடைகளுடன் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பெண்கள் புடவையுடனும், ஆண்கள் பட்டு வேட்டியுடன் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முக்கியமான ஆரத்தி எடுக்கும் போது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அப்பொழுது பெண்கள் கர்ப்ப கிரகத்திற்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் கர்ப்ப கிரகத்திற்கு வெளியே உள்ள நந்தி கூடத்தில் இருந்து பஸ்ம ஆரத்தியைக் காணலாம்.

சிவராத்திரி பண்டிகையின் போதும், சாவான் சோம்வார் எனும் மழைக்கால வருகை விழாவை ஒட்டியும் மஹாகாளீஸ்வரர் கோயிலிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சவான் (இந்து நாட்காட்டியின் படி ஆண்டின் 5வது மாதம்) மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மஹாகாளீஸ்வரர் உஜ்ஜெயின் மக்களின் நிலைமையை அறிந்துகொள்ள அங்கு வருவதாக ஐதீகம். அந்நாளில் மஹாகாளீஸ்வரர் சுவாமியின் கவசம் பல்லக்கில் வைத்து உஜ்ஜெயின் நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

webdunia photoWD
மஹாகாளீஸ்வரர் ராஜ பல்லக்கு சவான் மாதத்தின் கடைசி திங்கிட்கிழமை காண்பிக்கப்படும். இதனைக் காண பெரும் திரளான மக்கள் திரள்கின்றனர். அப்பொழுது இசையெங்கும் மஹாகாளீஸ்வரரின் திருநாமம் எங்கெங்கும் ஒலிக்கும்.

புராணங்கள் சொல்லுகின்றன : "உஜ்ஜெயினிற்கு ஒரே ஒரு அரசர்தான். அவரே மஹாகாளீஸ்வரர் இவ்வாறு கூறப்படுவதால் எந்த அரசரும், பேரரசரும் உஜ்ஜெயின் நகரின் புறநகர்ப் பகுதிகளில் கூட இரவு தங்குவதில்லை.

" சிந்தியாக்கள் உஜ்ஜெயினை ஆண்டபோது கூட அவர்களின் தாலியாடே அரண்மனை நகரத்தின் எல்லைக்கு வெளியேதான் இருந்தது."

ஆரத்தி நேரம் :

webdunia photoWD
அதிகாலை 4 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன.
அப்போதிருந்து காலை 6 மணி வரை பஸ்ம ஆரத்தி நடைபெறும்.
காலை 7.30 முதல் 8.15 வரை நைவேத்திய ஆரத்தி நடைபெறும்.
ஜல அபிஷேகம் மாலை 5 மணிக்கு முடிகிறது.
மாலை 6.30 முதல் 7 மணி வரை சந்தியா ஆரத்தி.
இரவு 10.30 மணிக்கு சயன ஆரத்தி நேரமாகும்.
இரவு 11 மணிக்கு கோயிலின் நடை மூடப்படும்.
( கோடைக் காலங்களில் நைவேத்திய ஆரத்தி காலை 7 முதல் 7.45 மணிவரையும், சந்தியா ஆரத்தி மாலை 7 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும்)

எப்பொழுது செல்லலாம்?

ஆண்டு முழுவதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். சிவராத்திரியின் போதும், சாவான் மாதத்திலும் இவ்விடம் செழுமையாகவும், ஒப்பில்லா ஆன்மீகச் சூழலுடன் இருக்கும். எங்கு நோக்கிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.

காலணிகள் இல்லாமல் காவாரியா அணிந்துகொண்டு காணப்படுவார்கள். சாவான் மாதத்தில் சர்வன் மகோத்சவா எனும் விழா கொண்டாடப்படும்.

எப்படிச் செல்லலாம்?

சாலை மார்கமாக :
உஜ்ஜெயின் - ஆக்ரா - கோட்டா - ஜெய்ப்பூர் மார்க்கமாகவும்,
உஜ்ஜெயின் - பாத்வா நகர் - ரத்லன் - சித்தூர் மார்க்கமாகவும்,
உஜ்ஜெயின் - மாக்ஷி - ஷாஜகான்பூர் - குவாலியர் - டெல்லி மார்க்கமாகவும்,
உஜ்ஜெயின் - தீவாஸ் - போபால் மார்க்கமாகவும்,
உஜ்ஜெயின் - துலியா - நாசிக் - மும்பை மார்க்கமாகவும் செல்லலாம்.

ரயில் மார்க்கமாக :
உஜ்ஜெயினில் இருந்து மாக்ஷி - போபால் மார்க்கம் (டெல்லி - நாக்பூர் பாதை)
உஜ்ஜெயின் - நாக்டா - ரத்லான் மார்க்கம் (மும்பை - டெல்லி பாதை)
உஜ்ஜெயின் - இண்டோர் மார்க்கம் (கான்பாவா மீட்டர்கேஜ் பாதை)

விமானம் மார்க்கம் :
இந்தோர் விமான நிலையத்தில் இருந்து உஜ்ஜெயின் 65 கி.மீ. தூரத்தில் உள்ளது.

எங்கு தங்கலாம்?

ஏராளமான விடுதிகள் உள்ளன. தர்மசாலாவும் உள்ளது. மஹாகாள் தர்மசாலா கமிட்டி, ஹர்ஷித் கமிட்டி ஆகியவற்றில் சாதாரண கட்டணத்திலும், அதிகக் கட்டணத்திலும் வசதியான தங்கும் இடங்களும் உள்ளன.

மஹாகாள் கோயில் புகைப்படத் தொகுப்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை!

இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

கல்யாண வரம் வேண்டுமா? கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்..!

இந்த ராசிக்காரர்கள் பணப்புழக்கம், பழக்க வழக்கங்களில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(08.01.2025)!

Show comments