Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனிவாச பெருமாள்-பத்மாவதி தாயார் திருக்கல்யாணம்

சீனிவாச பெருமாள்-பத்மாவதி தாயார் திருக்கல்யாணம்
, வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (14:12 IST)
சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் நிலையத்தில் சீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபோகம் நேற்று ‌சிற‌ப்பாக நடைபெற்றது. ‌திரு‌க்க‌ல்யாண ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி திருமலையில் நடக்கும் சீனிவாச திருக்கல்யாண மகா உற்சவம் மிகவும் ‌சிற‌ப்பானது. ‌திரு‌க்க‌ல்யாண தரிசனத்தை த‌மிழக ம‌க்க‌ள் எ‌ளிதாக பெறு‌ம் வகை‌யி‌ல், சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பெருமாள்-பத்மாவதி தயாரின் திருமண வைபோகத்தை காண ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலில் திரண்டிருந்தனர்.

காலை 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவ‌ங்‌கின. ‌கோ‌யி‌லை‌ச் சு‌ற்‌றி ப‌க்த‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்தை ம‌ட்டுமே காண முடி‌ந்தது. முக்கனிகள், சர்க்கரை, வெல்லம், பருப்பு, அரிசி, மஞ்சள், குங்குமம், கற்கண்டு, வளையல்கள் போன்ற பொருட்கள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே யாகம் வளர்க்கப்பட்டது. அர்ச்சகர்கள் மந்திரத்தை சொல்லி யாகத்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி புண்ணிய காரணமும், ரக்ஷா பந்தனமும், அக்னி பிரவேசமும், சங்கல்பம், மகா சங்கல்பம் பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மாப்பிள்ளை பெருமாளுக்கு பட்டு வேட்டியும், பட்டு அங்கவஸ்திரம், பீதாம்பரமும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மஞ்சள் ‌‌நிற‌ப் பட்டும் அணிவிக்கப்பட்டது. பெருமாள் கையில் மஞ்சள்காப்பு கயிறு கட்டப்பட்டது. பின்னர் தேங்காயில் மஞ்சள் தடவி வைக்கப்பட்டிருந்த திருமங்கல்யம் பெருமாளின் கைகளில் வைத்து ஒற்றி எடுத்து பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.

பெருமா‌ள் - ப‌த்மாவ‌தி ‌திரு‌க்க‌ல்யாண வைபோக‌த்தை‌க் க‌ண்ட பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பினர். பின்னர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெ‌ற்றது. அதனை தொடர்ந்து அம்மி மிதித்தல், ஊஞ்சல் ஆடுதல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு போன்ற நிகழ்ச்சிகளு‌ம் நடைபெற்றன.

Share this Story:

Follow Webdunia tamil