தசராவை முன்னிட்டு நேற்று வரை கடந்த 10 நாட்களாக மைசூரில் நடந்த கோலாகல விழா யானையின் மீது சாமூண்டீஸ்வரி அம்மன் அம்பாறையில் வந்த அழகிய ஊர்வலத்துடன் நிறைவுற்றது.
விஜயதசமியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பலராமா (யானை) மீது 80 கிலோ தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர்ந்து சாமூண்டீஸ்வரி வலம் வந்த அந்த காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
ஜம்போ சவாரி என்று அழைக்கப்படும் இந்த யானைகள் ஊர்வலத்தை கர்நாடக ஆளுநர் ரமேஷ்வர் தாகூர் துவக்கி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் இருந்து அம்மன் மீது மலர் தூவி வழிபட்டார் மைசூர் மகாராஜா பரம்பரையில் வந்த சாமராஜ உடையார்.
அழகிய இந்த ஊர்வலத்தின் வீடியோ காட்சியை கண்டு ரசியுங்கள்.