Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தும் மா காவால்கா

Webdunia
இதுவரை பைரவருக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போவது, மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைத்தான்.

ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம் செய்வதா க நாம் கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை.

சட்லாம் நகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மா காவால்கா கோய ி‌ ல ் பல ஆண்டுகளாக மக் க‌ ளா‌ல ் வ‌ழிபாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இந்த கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள மா காவால்கா, மா காளி, கால பைரவரின் சிலைகளுக்கு மதுவைத்தான் நைவேத்தியமாகப் படைக்கின்றனர் ப‌க்த‌ர்க‌ள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி வரும் மது, ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு அது கடவ ு‌ ள ் ‌ திருவுருவ‌ச ் ‌ சிலைகளின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்டதும் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடுகிறது. இவை அனைத்தும் பக்தர்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன.

இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், மாயமான முறையில் இந்த சிலைகள் இங்கு நிறுவப்பட்டன என்றும் கூறினார். மூன்று சிலைகளும் மது அருந்துவது முற்றிலும் உண்மையான விஷயம் என்றும் கூறுகிறார்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கு மதுவை காணிக்கையாக அளித்த ு, தங்களது விருப்பங்களை கோ‌ரி‌க்கையா க வை‌க்‌கி‌ன்றன‌ர ்.

ரமேஷ் என்ற பக்தர், மு‌ன்ப ு தா‌ன ் இ‌ந் த கோ‌யிலு‌க்க ு வ‌ந் த போத ு தன‌க்கு‌க ் குழ‌ந்த ை ‌ பிற‌ந்தா‌ல ் ஆடு வெட்டி, தனது பிள்ளைக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவே‌ன ் எ‌ன்ற ு வே‌ண்டி‌க ் கொ‌ண்டதா க‌ க ் கூறினார்.

த‌ற்போது தனக்கு குழந்தை பிறந்த ு‌ ள்ளதாகவு‌ம ், அத‌ற்கு நேர்த்தி கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சிறிய பாட்டில்களில் மது பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறினால் வெறும் பாதத்தில் நடந்து வருவதாகவும், ஆடு போன்றவற்றை பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கின்றனர்.

ஆடி அமாவாசை மற்றும் நவராத்திரி தினங்களில் இந்த கோயிலில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். சிறப்பு பூஜைகளின் போது பலருக்கு சாமி வந்து ஆடுவதையும் பார்க்க முடிகிறது.

உண்மையிலேயே இங்குள்ள சிலைகள் மதுவை குடிக்கின்றனவா அல்லது இதெல்லாம் மனிதர்களின் சித்து விளையாட்டா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பகல்பத்து உற்சவம்.. இன்று கோலாகல தொடக்கம்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | January 2025 Monthly Horoscope Kumbam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | January 2025 Monthly Horoscope Magaram

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு! | January 2025 Monthly Horoscope Dhanusu

இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(31.12.2024)!

Show comments