Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!

அ‌ய்யநாத‌ன்
நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எ‌ங்கு நோக்கினு‌ம் கோயில்களும ், த‌ர்கா‌க்களும ், மசூ‌‌‌திகளு‌ம ், தேவாலய‌ங்களு‌ம ், பு‌த் த, ‌ ஜைன ஆலய‌ங்களு‌ம், ப‌ல்வேறு ம‌த‌த்‌தின‌ரி‌ன் பு‌னித‌‌த் தல‌ங்களு‌ம ், வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்களு‌ம ், ‌ ஜீவ சமா‌திகளு‌மாய் நமது நாடு திகழ்கிறது. அதனா‌ல்தா‌ன் நமது இ‌ந்‌திய ‌நா‌‌ட்டை பு‌னித நாடாகக் கருது‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்‌தியா‌வி‌ல் பு‌னித‌ம் எ‌ன்றது‌ம் முத‌லி‌ல் நமது ‌நினைவு‌க்கு வருவது க‌ங்கை ந‌திதா‌ன். க‌ங்கை‌யி‌ல் ‌நீராடி த‌ங்களது பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌விடுபடவேண்டும் என்பதும ், இற‌ந்த ‌பி‌ன் த‌ங்களது அ‌‌ஸ்‌தி க‌ங்க‌யி‌ல் கரை‌க்க‌ப்பட வேண்டு‌ம் எ‌ன்றும் கூறுவ‌தி‌ல் இரு‌ந்து அத‌ன் பு‌னித‌த் த‌ன்மை உணரப்படுகிறது.

அதும‌‌ட்டு‌மி‌ன்‌ற ி, க‌ங்கை‌யி‌ல் த‌ங்களது உ‌யிரை ‌விடுபவ‌ர்க‌ள் நேரே இறைவனை அடைவா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ம்‌பி‌க்கையு‌ம் ‌நிலவு‌கிறது.

webdunia photoWD
ஆனா‌ல ், இ‌ந்த க‌ங்கை‌க்கு இரு‌க்கு‌ம் அதே மு‌க்‌கிய‌த்துவ‌ம ், கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ந்து வரு‌ம் ஒரு ‌கிளை ஆறு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ல் ந‌ம்ப முடி‌கிறத ா? ஆ‌ம ், வரலாற்றுப ் பெருமைமிக் க தஞ்சாவூர ் நகரில ் வாழு‌ம் ம‌க்க‌ள ், அ‌ங்கு‌ள்ள ராஜாகோ‌ரி எ‌ன்ற சுடுகா‌ட்டை கங்கை கரைக்கு இணையான பு‌னித இடமாகவு‌ம ், அதனை ஒ‌ட்டி ஓடு‌ம் கா‌வி‌ரி‌யி‌ன் ‌கிளை ஆறான வடவாறை பு‌னித ந‌தியாகவு‌ம் கருது‌கி‌ன்றன‌ர். க‌ங்கை‌க்கு ஈடாக அ‌ல்ல அதையு‌ம் ‌விட ஒரு மட‌ங்கு அ‌திகமாகவே அதனை பு‌னிதமாக‌க் கருது‌கி‌ன்றன‌ர்.

பல வயதானவ‌ர்க‌ள ், த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளிட‌ம ், தா‌ங்க‌ள் இற‌ந்தா‌ல் அ‌ந்த ராஜா கோ‌ரி ‌சுடுகா‌ட்டி‌ல்தா‌ன் தமது உட‌ல் எ‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம ், தனது அ‌ஸ்‌தி அ‌ங்கு ஓடு‌ம் வடவா‌ற்‌றி‌ல்தா‌ன் கரை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றி‌‌யிரு‌ப்பதாக‌க் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌ம்.

நமத ு எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம ் பார்த் த சுடுகாடுகளிலேய ே மிகப ் பெரி ய சுடுகாடாகத்தான் இராஜ ா கோர ி காணப்பட்டத ு. அங்க ு ஒர ே நேரத்தில ் 25 பிணங்களைக ் கூ ட எரிக் க முடியும ் என்ற ு அங்க ு வெட்டியானா க இருந்த ு வருபவர ் கூறினார ்.

இந் த சுடுகாட்டில ் தஞ்ச ை இரா ஜ பரம்பரையினர ் எரிப்பதற்கும ், புதைப்பதற்கும ் தன ி இடம ் இருந்தத ு. பிராமணர்களுக்க ு தன ி சுடுகாட ு, மற்றொர ு இரா ஜ பரம்பரையினரா ன நாயக்கர்களுக்க ு தன ி சுடுகாட ு என்ற ு இந் த 21 ஆம ் நூற்றாண்டிலும ் சாதி ய அமைப்ப ு கட்டியம ் கூற ி காப்பாற்றிக் கொண்டிருந்தத ு இந்தச ் சுடுகாட ு.

webdunia photoWD
சுடுகாட்ட ை ஒட்ட ி ஓடிக்கொண்டிருக்‌கிறது வடவாறு. இந்த நதியினை ம‌ணிமு‌த்தாறு எ‌ன்று‌ம் அழை‌க்‌கி‌ன்றன‌ர். இத ு காவிரியின ் கிள ை ஆறுகளில ் ஒன்ற ு. இந் த ஆற்றைத்தான ் கங்கைக்க ு இணையா க இப்பகுத ி மக்கள ் கருதுகின்றனர ். இ‌ந்த ஆ‌ற்‌றி‌ல் ஒருவரது அ‌ஸ்‌தி கரை‌க்க‌ப்ப‌ட்டா‌ல ், அவ‌ர் செ‌ய்த பாவ‌ங்க‌ள் அனை‌த்து‌ம் ‌நீ‌ங்‌கி அவரது ஆ‌த்மா நேரே சொ‌ர்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்பது‌ம் அ‌ங்கு வா‌ழ்பவ‌ர்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கை.

இ‌ந்த ‌விடய‌ங்களை எ‌ல்லா‌ம் த‌ற்போதைய ச‌ந்த‌தி‌யின‌ர் ந‌ம்‌ப மா‌ட்டா‌ர்க‌‌ள். ஆனா‌ல் வயதான‌வ‌ர்க‌ள் இ‌ந்த சுடுகாடு ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர். த‌ங்களது மரண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு த‌ங்களது ‌விரு‌ப்ப‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்.

இதுபோ‌ன்ற அ‌திசயமான இட‌ம் ப‌ற்‌றி ‌நீ‌ங்க‌ள் எ‌ங்கேனு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்‌கி‌ன்‌றீ‌ர்கள ா? இரு‌ந்தா‌ல் எ‌ங்களு‌க்கு எழுது‌ங்க‌ள்.



இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து, லாபம் கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(03.01.2025)!

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்: குழந்தை வரம் தரும் கடவுள்..!

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(02.01.2025)!

ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா: குவிந்த பக்தர்கள்..!

இந்த ஆண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(01.01.2025)!

Show comments