Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் மிதக்கும் சிலை!

Webdunia
தண்ணீரில் கல் மிதக்குமா? அதுவும் 7 கிலோ எடையுடைய சிலை மிதக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தங்களின் நல்லது, கெட்டதை தண்ணீரில் சிலை மிதப்பதை வைத்து கிராம மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால் அதிசயமாக இருக்கிறதா? இதற்கான விடைகளைத்தான் இந்த வார 'நம்பினால் நம்புங்கள்' பகுதியில் பார்க்கப் போகிறோம்.

webdunia photoWD
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் ( Dewas) இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது ஹத்பிப்லியா ( Hatpipliya) கிராமம். இங்குள்ள கோயிலில் இருக்கும் நரசிம்மர் சிலை தான் தண்ணீரில் மிதக்கிறது. இந்த அற்புதத்தை எமது படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

ஆண்டுதோரும் பாதவா ( Bhadava) மாதத்தின் 11-வது நாளில் நடைபெறும் டோல் கியாராஸ் ( Dol Gyaras) பண்டிகையின்போது, சுவாமி வழிபாட்டுக்குப்பின் நரசிம்மர் சிலை ஆற்றில் விடப்படுகிறது. அப்போது தான் விக்ரஹம் தண்ணீரில் மிதக்கும் அதிசயம் நடக்கிறது.

webdunia photoWD
இந்த அற்புத நிகழ்வு குறித்து கோயிலின் தலைமை அர்ச்சகர் கோபால் வைஷ்ணவா கூறுகையில், "விக்ரஹம் ஒருமுறை தண்ணீரில் மிதந்தால் அடுத்த 4 மாதங்களும், 3 முறை மிதந்தால் ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்று பொருள்" என்றார்.

கடந்த 20, 25 வருடங்களாக இவையனைத்தையும் பார்த்து வருகிறேன். இந்த நரசிம்மர் சிலை மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர்" என்‌கிறா‌ர் சோஹன்லால் என்ற தச்சர்.

இந்த சிலையை தண்ணீரில் மூழ்கச் செய்தபோதும், அது தண்ணீருக்கு மேலே வருவதாக பூரிப்புடன் தெரிவித்தார் கோயிலின் மற்றொரு அர்ச்சகர்.

webdunia photoWD
கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாதபோதும், இத்திருவிழாவின் போது‌ மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் வந்து விடுவதாக, இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். விழாவின் போது ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இதுவரை ஏற்பட்டதே இல்லையாம்.

தண்ணீரில் சிலை மிதப்பதற்கான காரணம் என்ன? சிலை வடிவமைக்கப்பட்ட கல்லின் தன்மையால் இது சாத்தியமா? அல்லது கடவுளின் அற்புதத்தால் இது நடக்கிறதா? உங்கள் கருத்து என்ன? எதுவானாலும் எங்களுக்கு எழுதுங்கள்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2025)!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய கடன்கள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2025)!

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Show comments