எப்பொழுதெல்லாம் நாம் நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றோமோ அப்பொழுதெல்லாம் தர்க நெறிகளை நாம் தவிர்த்திட வேண்டும்.
அப்படித்தான் இந்தக் காதல் கதையும். ஆண் நாகமும், பெண் நாகமும் காதல் கொண்டு ஒன்றை ஒன்று
webdunia photo
WD
துரத்திச் சென்ற போது பெண் நாகம் காரில் அடிபட்டு மரணமடைந்ததாகவும், அந்தத் துயர் தாங்க முடியாமல் ஆண் நாகமும் தரையில் தனது தலையை அடித்துக் கொண்டு மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படும் இந்தக் காதல் கதை.
இது நடந்த இடம், குஜராத் மாநிலம் பரோடா நகருக்கு அருகே உள்ள மஞ்ஜால்புர் என்ற இடத்தில். நடந்த வருடம் 2002.
அந்த நாகங்களுக்காக கட்டப்பட்ட அந்தக் கோயிலின் மேலாளர் ஸ்ரீஹர்மான் பாய் சோலங்கி நம்மிடம் இந்தக் கதையைக் கூறினார்.
பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவிட்டு தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பம், 2002ம் ஆண்டு ஷிராவன பாரேக் மாதத்தில் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையைக் கடந்து கொண்டிருந்த நாகத்தின் மீது அவர்கள் சென்ற கார் மோதி விட்டது. அந்த நாகம் அங்கேயே இறந்துவிட்டது.
அந்த நாகத்தைத் தொடர்ந்து வந்த ஆண் நாகமும் அந்த இடத்திலேயே தன்னை மாய்த்துக் கொண்டு விட்டது.
webdunia photo
WD
அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவைகளின் நினைவாக இங்கு ஒரு நினைவிடத்தைக் கட்ட முற்பட்டுள்ளனர். அதற்காக கட்டடம் கட்ட துவங்கிய மறுநாள் திடீரென்று அந்த இடத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அந்த இடத்தில் மட்டும் பூமி இரண்டு மூன்று அடிகள் கீழே போய்விட்டதாகவும் கூறினார்.
இதனை அந்த ஊர் மக்கள் ஒரு அதிசயமாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்பிறகு இந்த இடத்தில் பல அதிசயங்கள் நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார்.
பக்தர் ஒருவர் தான் கொண்டு வந்த தேங்காயை
webdunia photo
WD
இவ்விடத்தில் உடைக்க, அந்த தேங்காய்க்குள் மேலும் இரண்டு தேங்காய் இருந்ததாம்.
மற்றொரு பக்தர் கொண்டு வந்த தேங்காயில் இரண்டு கண்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரிந்ததாம்.
அதனை அவர் இந்த கோயிலில் வழிப்பாட்டிற்காக வைத்துவிட்டுச் சென்றாராம்.
அதன்பிறகு இந்த கோயிலுக்கு வந்து வணங்குவோர் நினைத்தது நிறைவேறுகிறது என்ற நம்பிக்கை வளர ஆரம்பித்தது. தற்பொழுது வணிகத்தில் வெற்றி பெறவும், குடும்ப நலனிற்காகவும் இங்கு ஏராளமான மக்கள் வரத் துவங்கிவிட்டனர்.
சில பெண்கள் பிள்ளைவரம் வேண்டி இக்கோயிலுக்கு வருகின்றனர்.
கடவுளையும் மதத்தையும் தொடர்பு படுத்தி இப்படிப்பட்ட சம்பவங்கள் பல நமது பாரத பூமியில் நடந்து வருகிறது. இவைகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது?
webdunia photo
WD
எப்படி அதனை ஒரு கடவுளின் செயலாகவோ, அதிசயமாகவோ கொள்வது என்று புரியாமல் ஒரு குழப்பமான நிலை இருந்தாலும் சராசரி மக்கள், சாதாரண நிகழ்வுகளைக் கூட தெய்வச் செயலாகக் கருதி பல இடங்களில் வணங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நம்பிக்கைகள் பற்றி நீங்கள் என்னக் கூறுகின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.