பக்தர்களின் அதீத அன்பும், பக்தியும் கடவுளைய ே கட்டிப்போடும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கவிருக்கும் கேவ்தாஸ்வாமி கால பைரவநாதர் கோயிலில், பக்தர்கள் கடவுளை சங்கிலியால் கட்டிப்போடுகின்றனர்.
இந்த கோயில் ஷாஜாபுர் மாவட்டத்தில் உள்ள மால்வா-ஆகர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
கோயிலில் அமைந்துள்ள காலபைரவ நாதரின் மூலவர் சிலை பூஜை செய்யப்பட்டு பின்னர் இரும்புச் சங்கிலியால் கட்டப்படுகிறது.
இந்த கோயிலை 1481ஆம் ஆண்டு ஜல ராஜ்புத் என்ற மன்னர் நிறுவியுள்ளார். கோயிலைச் சுற்றித்தான் தனது சாம்ராஜ்யத்தை நிறுவினார். பிறகு வந்த ராஜ் புத்திரர்கள் பலரும் இப்பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் ராஜஸ்தானிற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்து வந்த ராஜ்புத்திர சமூகத்தினர், காலபைரவ ளநாத் கடவுள் விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடுவதாகக் கருதினர்.
குழந்தை வடிவில் வந்து வீடுகளில் இருக்கும் இனிப்புகளை திருடிச் செல்வதும், சில சமயங்களில் வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அடிப்பதுமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், மதுபானத்திற்கு அடிமையாகி பொதுமக்களுக்கு துன்பம் ஏற்படுத்துவது அதிகரித்தது. இதனால் பொதுமக்களுக்கு கடவுள் மீது அச்சம் ஏற்பட்டது.
இந்த அச்சத்தின் காரணமாக தாங்கள் மிகவும் விரும்பும் கடவுள் அவ்விடத்தை விட்டுச் சென்று விடுவாரோ என்று மக்கள் பயந்தனர்.
அதனால் பெரிய பெரிய மதத் துறவிகளும், மேஜிக் நிபுணர்களும் இணைந்து கடவுளை அங்கேயே இருக்க வைப்பதற்கான வழிமுறையைத் தேடினர்.
அப்போதுதான் அவரை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்தால், கடவுள் இந்த ஊரை விட்டு எங்கேயும் செல்ல முடியாது என்று முடிவெடுத்து அன்று முதல் காலபைரவநாதர் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு வருகிறார்.
webdunia photo
WD
பைரவ நாதர் பொதுவாக ஒரு துறவியைப் போன்றவர். ஆனால் இந்த கோயிலில் பைரவ நாதருக்கு சிகரெட், மது, உணவு வகைகளும் படைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை பைரவ நாதரின் சிலைக்கு சிகரெட் பற்ற வைத்து அளிக்கப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் கடவுளை சங்கிலியால் கட்டி வைக்கும் முறையை மாற்றிக் கொள்ள பக்தர்களுக்கு விருப்பமில்லை. சங்கிலியை கழற்றிவிட்டால் கடவுள் மீண்டும் பழையபடி மக்களுக்குத் தொல்லை கொடுப்பார் என்றும், இவ்விடத்தைவிட்டு சென்று விட வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.
பக்தர்கள் படைக்கும் மதுவை யாருக்கும் தெரியாமல் கடவுள் குடித்துவிடுவதாகவும் இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.