கை ரேக ை, எண் ஜோதிடம ், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ள ன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பத ு.
நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம ்.
நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும ், நிகழ் காலத்தையும ், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்ற ன.
webdunia photo
K. AYYANATHAN
இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும ், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கடல் கடந்து வாழ்பவர்கள் கூட இத்திருத்தலத்திற்கு வந்து வைத்தீஸ்வரனின் தரிசனத்தைக் கண்டும ், நாடி ஜோதிடத்தின் மூலம் தங்களது எதிர்காலத்தைக் கண்டும் செல்கின்றனர ்.
க ூ. வ ி. பாபுசாமி என்கின்ற நாடி ஜோதிடரை நாங்கள் சந்தித்தோம ். நாடி ஜோதிடம் என்னவென்பதை அவர் நமக்கு விளக்கினார ். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமுனிவர் அகத்தியர் நாடி ஜோதிடத்தை அருளியதாகக் கூறினார ்.
அவரைத் தொடர்ந்து கெளசிக ரிஷியும ், சிவ வாக்கியர் என்கிற சித்தரும் இம்முறையை தங்களது சீடர்களின் மூலம் ஒரு பாரம்பரியமாக தொடரச் செய்துள்ளதாக தெரிவித்தார ்.
ஆண்களின் வலது கை பெருவிரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும ், பெண்களின் இடது கை பெரு விரல் ரேகையின் அமைப்பைக் கொண்டும் அவர்களுக்குரிய ஓலைச்சுவடியைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அவர்களின் பெயர ், தாய ், தந்தையர ், சகோத ர, சகோதரிகளின் பெயர்கள ், அவர்களின் எண்ணிக்க ை, அவர்களுக்குள்ள சொத்த ு, கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை துல்லியமாகத் தெரிவிப்பதாக கூறுகிறார ். இந்த விவரங்கள் அனைத்தும் சரியாக கண்டறியப்பட்டப் பின்னரே ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றோம் என்றார ்.
webdunia photo
K. AYYANATHAN
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் 108பெருவிரல் ரேகைப் பதிவுகளுக்குள் அடங்குவதாகக் கூறிய பாபுசாம ி, இந் த 108 பிரிவுகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும ், ஒருவருடைய பெருவிரல் ரேகை அமைப்பைக் (வடிவைக்) கொண்டே அந்த நபருக்குரி ய ஓலைச் சுவடி கண்டுபிடிக்கப்படுகிறது என்றார்.
ஒருவருடைய பெருவிரல் ரேகை பதிவ ு, மற்றவர்களுடைய ரேகைப் பதிவில் இருந்து பெரிதும் வேறுபடுகிறத ு. பெருவிரல் ரேகை வடிவத்தைக் கொண்டு அதனைப் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர ்.
ஒரு ரேகைப் பதிவின் வடிவத்தைக் கொண்டு அதற்குரி ய ஓலைச் சுவடிக் கட்டை தேர்ந்தெடுக்கின்றனர ். அந்த கட்டில் உள்ள ஓலைச் சுவடிகளில் இருந்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பெற்று அந்த நபருக்குரிய சரியான ஓலைச் சுவடியை கண்டுபிடிக்கின்றனர ்.
webdunia photo
K. AYYANATHAN
இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதனை செய்து காட்டுமாறு கேட்டுக் கொண்டோம ். எங்களில் ஒருவரின் பெருவிரல் ரேகைப் பதிவை அளித்தோம ். அந்த ரேகைப் பதிவின் வடிவத்தைக் கண்ட பாபுசாம ி, அது சங்கு வடிவத்தில் இருப்பதாகக் கூற ி, அதற்குரிய ஓலைச் சுவடியைக் கண்டுபிடிக்க அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்றார ்.
சிறிது நேரத்தில் ஒரு ஓலைச்சுவடிக் கட்டுடன் மீண்டும் வந்தார ். கை ரேகைப் பதிவை அளித்தவரிடம் தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்குமாறு பாபுசாமி கூறினார ்.
பாபுசாமி கேட் ட முதல் கேள்விக்கு அவர் இல்லை என்று பதிலளித்ததும ், அவர் இரண்டாவது ஓலைச் சுவடிக்குச் சென்றார ். அதில் இருந்து கேள்வி கேட்டார ். அதற்கும் இல்லை என்று அந்த நபர் பதில் கூற... இவ்வாற ு 10 ஓலைகள் இல்லை என்ற கேள்விகளால் திருப்பப்பட்டத ு. 11 வது ஓலைச் சுவடியில் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைத்தத ு.
நீங்கள் இரண்டு பட்டங்களைப் பெற்றவர ா? ஆம ். உங்களுடைய சொந்த வீட்டில் வசிக்கிறீர்கள ்? ஆம ். உங்களுக்கு எந்த நோயும் இல்ல ை? ஆம ். உங்கள் மனைவி பணியேதும் செய்யவில்ல ை. இல்லத்தரச ி? ஆம ். உங்களுக்கும் உங்களது தந்தைக்கும் ஒரு முறைதான் திருமணம் நடந்தத ு? ஆம ். இதுபோல மேலும் இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்றே பதில் வந்தத ு. ஆனால ் 8 வது கேள்வ ி : உங்களின் மகள் அயல்நாட்டில் படிக்கின்றாள ்? என்று பாபுசாமி கூற அவர் இல்லை என்று பதிலளிக்க அந்த ஓலையும் திருப்பப்பட்டத ு.
webdunia photo
K. AYYANATHAN
மேலும ் 9 ஓலைகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலே வந்ததால் வேறு ஒரு ஓலைச் சுவடிக் கட்டை தேடச் சென்றார் பாபுசாம ி. சிறிது நேரத்தில் வெறுங்கையுடன் வந்தவர ், " இது உங்களுடைய நாளில்ல ை. உங்களுடைய வாழ்வை தெரிந்து கொள்ளும் ஒரே நோக்கத்துடன ் வேறொரு நாள ் நீங்கள் வரவேண்டும ். அன்றுதான் உங்களுக்குரிய ஓலைச் சுவடி கிட்டும ். அதுவும் விதித்தத ே!" என்று கூறினார ்.
இதற்காக என்ன கட்டணம் என்று அவரிடம் கேட்டோம ். எதுவும் இல்லை என்று பாபுசாமி கூறிவிட்டார ். " நாடி ஜோதிடம் பார்க்க வரும் ஒருவரின் விவரங்களை முழுமையாக கண்டுபிடித்து அளித்த பிறகே கட்டணத்தை ஏற்போம ். இல்லையென்றால் ஒரு பைசா கூட வாங்க மாட்டோம ். இதுதான் இங்கு நாங்கள் கடைபிடிக்கும் வித ி" என்று கூறி எங்களை ஆச்சரியப்படுத்தினார ்.
இவ்வுலகத்தில் வாழும் கோடானுகோடி மக்களின் விதியும ், வாழ்வும் நமது ரிஷிகள் எழுதிய ஓலைச் சுவடிகளில் தான் உள்ளது என்பது எங்களை ஆச்சரியப்படுத்தியத ு.
பாரம்பரியம ், ஞானம் என்றெல்லாம் கூறப்பட்டாலும் வித ி, மறுபிறப்ப ு, கடந்த காலம் என்பதெல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக சிந்திக்கும் மனதுக்கு ஒரு புதிர்தான ். சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் இதனை ஏற்கிறார்கள ்.