Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால சர்ப தோஷமும், நிவர்த்தியும்!

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (15:55 IST)
webdunia photoWD
உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையினால் உங்கள் முன்னேற்றம் தடைபடும ா?... அவைகளால் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும ா?... அல்லது அவைகள் உங்களை காயப்படுத்தும ா?... இதுபற்றியெல்லாம் கருத்து கூறுவது மிகவும் கடினம ்... சிலர் இதையெல்லாம் சுத்த மூடத்தனம் என்று கூறுவார்கள ்.

ஆனால் இந் த 21 ஆம் நூற்றாண்டிலும் இவைகளை நம்பக் கூடிய மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர ்.

நம்பினால் நம்புங்கள் தொடரின் அடுத்தகட்டமாக நாசிக் நகருக்கு அருகே உள்ள திரியம்பக் கிராமத்திற்கு செல்கின்றோம ். தங்களைப் பீடித்துள்ள கால சர்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விலக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கிராமத்திற்கு வருகின்றனர ். அதிகாலையில் நாசிக் சென்றடைந்த நாங்கள ், வாடகை கார் ஒன்றை பிடித்து திரியம்பகேஷ்வர் சென்றோம ். வாடகைக் கார் ஓட்டுநர் கணபதி அங்கு கொண்டு செல்ல சம்மதிக்க எங்கள் பயணம் துவங்கியத ு.

பயணம் செய்யும்போது காரோட்டி கணபதி பேசிக் கொண்டே வந்தார ். உங்களுக்கு என்ன பிரச்சின ை?... ஏன் திரியம்பகேஷ்வர் வருகிறீர்கள ்?... என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார ்.

நாராயண் நா க பலிக்கா க ( கால சர்ப தோஷத்திற்காக செய்யப்படும் சிறப்பு பூஜ ை) செய்யப் போகிறீர்கள ா? அதற்காக பூஜாரி யாரையும் முடிவு செய்துள்ளீர்கள ா?... என்றெல்லாம் கேட்டார ்.

webdunia photoWD
இல்லை என்று நாங்கள் பதிலளித்ததும ், தனக்கு ஒரு பூஜாரியைத் தெரியும் என்றும ், அவர் நன்றாக இந்த பூஜையை செய்வார் என்றும ், ஒவ்வொரு ஆண்டும் கால சர்ப தோஷத்தைப் போக்கிக் கொள் ள பல்லாயிரக்கணக்கானோர் திரிம்கேஷ்வருக்கு வருகின்றனர் என்று கணபதி கூறினார ்.

திரியம்கேஷ்வர் வந்து சேர்ந்தோம ்.

மகாமிருத்ஞ்ஜய ஜபமும ், சிவ ஸ்துதியும ் அந்த சூழலில் நிரம்பியிருந்தத ு. முதலில் கோதாவரி கரையில் உள்ள குஷாவத் தீர்த்தம் என்ற குளத்திற்குச் சென்றோம ். அங்கு மக்கள் புனித நீராடிக் கொண்டிருந்தனர ். புனித நீராடியவர்கள் வெள்ளாடை உடுத்தி இருந்தனர ். அவர்கள் எல்லாம் கால சர்ப தோஷத்திற்காக சிறப்பு பூஜை செய்ய தயாராக உள்ளதாக கணபதி கூறினார ்.

webdunia photoWD
கால சர்ப தோஷத்திற்காக வந்த ஒரு குடும்பத்தினரிடம் பேசினோம ். அந்த குடும்பத்தின் தலைவர் சுரேஷ் காண்ட ே, தனது மகள் சுவேதாவிற்க ு கால சர்ப தோஷம் இருப்பதால் திருமணம் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறினார ்.

தங்களது பூஜாரியின் ஆலோசனைக்கு இணங்க இங்கு வந்ததாக தெரிவித்தார ். அப்போது பேசிய சுவேதாவின் தாயார ், அவரது உறவினர் ஒருவருக்குக் கூட கால சர்ப தோஷம் இருந்ததாகவும ், இங்கு வந்து சிறப்பு பூஜை செய்ததற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிட்டதாகவும் கூறினார ்.

காண்டே குடும்பத்தினரைப் போல கால சர்ப தோஷத்தை நிவர்த்திக்கும் பூஜைக்காக பல குடும்பத்தினர் வந்திருந்தனர ். அவர்களில் நன்கு படித்தவர்களும் பலர் இருந்தனர ்.

அதன்பிறகு நாங்கள் கம்லாகர் அகோர்கர் என்ற பூசாரியைச் சந்தித்தோம ். ஒருவரது ஜாதகத்தில் 7 கிரகங்களும் ராகுவிற்கும ், கேதுவிற்கும் இடையில் வரும்போது கால சர்ப தோஷம் ஏற்படுகிறது என்று கூறினார ்.

இன்றை ய காலக்கட்டத்தில் கால சர்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும ், அதற்குக் காரணம் அவர்கள் செய்ய வேண்டிய சிரார்த்தங்களை செய்யாததே என்றும் கூறினார ்.

webdunia photoWD
கால சர்ப தோஷத்திற்கான சிறப்பு பூஜை விநாயகரை வழிபடுவதில் இருந்து துவங்குகிறத ு. பிறகு கலசத்தை வணங்குதல ். வெள்ளியிலும ், தங்கத்திலுமா ன 9 நாகங்களை வழிபட்ட பின்னர் அவைகள் தண்ணீரில் முக்கி எடுக்கப்படுகின்ற ன. இந்த இரண்டு மணி நேர பூஜை ஹவான் என்ற முக்கிய பூஜையுடன் முடிகிறத ு.

20 விழுக்காடு மக்களின் ஜாதகங்களில் இந்த தோஷம் இருக்கின்றது என்றும ், அதனால் தான் அவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அகோல்கர் என்ற பக்தர் கூறினார ்.

கால சர்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட பிரதீப் குமார ், அவரது மனைவி சுனந்தா சிங் ஆகியோருக்காக நாராயண் நாக பலி பூஜை செய்ய அகோல்கர் வந்துள்ளார ்.

webdunia photoWD
தனது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன என்று சுனந்தா கூறினார ். தனது மகன் மருத்துவராக இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்ல ை, நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதாகக் கூறிய சுனந்த ா, தங்களுக்கு கால சர்ப தோஷம் இருப்பதாக அவர்களது பூஜாரி கூறியதை அடுத்து திரியம்கேஷ்வர் வந்துள்ளதாகக் கூறினார ்.

கால சர்ப தோஷ பூஜையை முழுமையாகக் கண்டபின் அந்த கிராமத்திற்கு வந்தோம ்.

அங்குள்ள ஒவ்வொரு பூஜாரியின் வீட்டிலும் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்ற ன. தங்களுடைய ஜாதகத்தில் இருக்கும் கால சர்ப தோஷத்தை விலக்குவதற்காக பெரும்பாலானவர்கள் பூஜை செய்கின்றனர ். சில வீடுகளில ் 20 குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பூஜை செய்து கொண்டிருந்த ன. இப்படிபட்ட பெரிய குழுவாக பூஜை நடைபெறும் இடத்தில் இரண்டு மூன்று பூஜாரிகள் புனித மந்திரத்தை ஒலிப்பெருக்கியின் முன் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தனர ்.

இவைகளை எல்லாம் கண்ட நாங்கள ், இந்த பூஜை எல்லாம் பயனுள்ளதாக இருக்கின்றதோ இல்லையோ ஆனால ், அதை செய்யும் பூஜாரிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தோம ்.

இப்படிப்பட்ட பூஜைகளால் ஓரளவிற்கு தங்கள் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சில பக்தர்கள் கூறினர ். சிலர் தங்களுடைய மனதை திருப்தி செய்து கொள்ள இதனைச் செய்வதாகக் கூறினர ். தங்களுடைய ஜாதகத்தில் உள்ள தோஷம் அகன்றுவிட்டதால் சந்தோஷமாக இருப்பதாக சிலர் கூறினர ்.

webdunia photoWD
மற்றொரு புறத்தில் பார்த்தால் இந்த பூஜைகள் குறித்து நமது புனித நூல்களில் எந்த குறிப்புகளும் இல்ல ை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்தான் இப்படிப்பட்ட பெரிய பூஜைகள் ஒரு நடைமுறையானத ு. பூஜைகளுக்காக பல பூஜாரிகள் ஒரு கட்டணத்தை நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறத ு.

பெரிய குழுக்களாக ஒன்றிணைந்து பூஜை செய்து அவர்களுக்காக ஒலிப்பெருக்கி முன ் அமர்ந்து அந்த பூஜாரிகள் சொல்லும் மந்திரங்கள் சரியானதுதானா என்று மக்கள் புரிந்து கொள்வது கூட இல்ல ை.

இங்கு வருபவர்கள் அனைவரும் கடவுளை தரிசிக்கவே வருகின்றனர ். கால சர்ப தோஷ நிவர்த்திக்காக பூஜை செய்ய திரியம்பர் கிராமத்திற்கு மக்கள் வருவதால் அதுவே இங்கு பெரிய வியாபாரமாகிவிட்டத ு.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2025)!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய கடன்கள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2025)!

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Show comments