யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்றொரு இடத்தில் இருந்தால் அது ஒரு யோகம் என்று சொல்வார்கள்.
உதாரணத்திற்க சந்திரனுக்கு 4ல், 7ல், 10ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும்.
6 க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம ் ” என்று ஒரு வாக்கு உண்டு.
கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.
குறிப்பாக கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.
ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா?
எதிர்பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை ராஜ யோகம் என்று சொல்லலாம்.
யோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?
அதாவது நமக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம் என்று சொல்கிறோம். அதாவது அதிர்ஷ்டம்.
யோகம் என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள் பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும்.
யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. ராஜ யோகம் என்று சொல்லும்போது பலர் வணங்கக் கூடிய மாமனிதனாவான் என்று சொல்வார்கள்.
ராஜ யோகம் என்பது எந்த கிரக அமைப்பைப் பொறுத்தது?
எல்லா லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் இன்னன்ன இடத்தில் சேர்ந்திருந்தால் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு, மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால் “சந்திரனும் புதனும் சேர்ந்தால் இந்திரனைப் போல வாழ்வான ் ” என்று சொல்வார்கள்.
துலாம் லக்னத்திற்கும் சந்திரனும், புதனும் சேர்ந்தால் இந்திரன் போல் வாழ்வான் என்று சொல்வார்கள்.