மாறி வருகின்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச் சீர்கேட்டால் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் (இயற்கை) இழந்து வருவது ஏராளம் என்பதை நாம் உணராமல் இருப்பது வேதனைக்குரியது. புதியனவெல்லாம் நன்மை பயக்குமேயானால் ஏற்புடையது தான், ஆனால் பழைய பண்பாடுகளை ஆராயாமல் புறந்தள்ளிவிடுவது விவேகமாகாது. webdunia photoFILE பண்டைய பண்பாடுகளில் உணவு உள்பட அனைத்திலும் ஒரு காரணம், நன்மை இல்லாமல் இல்லை. உதாரணம் எள்ளிலிருந்து பெறப்படும் நல்ல எண்ணெய் இன்று வழக்கத்திலிருந்து மறைந்துவிடும்...