Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடகம்:

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:25 IST)
webdunia photoWD
நல்லது, கெட்டது நான்கையும் தெரிந்து செயல்படக்கூடிய நீங்கள், நல்ல சிந்தனையாளர்கள், கடினமாக உழைக்கும் குணமும், நல்லதே நினைக்கும் மனசும் கொண்டவர்கள்.

செய்நன்றி மறவாத நீங்கள் காலம் வரும்போது திருப்பிச் செய்வதற்கு ஒருபோது தயங்கமா‌ட்டீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்த ராகுவும், இரண்டாம் வீட்டில் நின்ற கேதுவும் சொல்லும் அளவிற்கு நல்லதை செய்தார்கள் அல்லவா? இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை கீழ்கண்ட பலன்களைத் தருவார்கள்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்பாராத வகையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபங்கள் குறையும். உங்களை ஏமாற்றுபவர்களின் குணமறிந்து ஒதுங்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிதாகும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்பது நல்லது. வருமான அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும்.

பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்புக் கிடைக்கும். பால்ய நண்பர்களின் உதவிக் கிட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் பணம் பெறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியான வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைக் கேட்டு தொழில் தொடங்குவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துக் கொள்வீர்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு பெறுவீர்கள். சக ஊழியர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகும். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் நல்ல வேலைக் கிடைக்கும். நெருங்கியவரானாலும் மற்றவர்களுக்காக ஜாமின் மனுக்களில் கையெழுத்திட வேண்டாம்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான ், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருகிறார். சமயோஜித புத்தியுடன் இனி பேசுவீர்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். பண இழப்பு, வீண் பகை வந்துபோகும். வழக்குகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்தினால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலக்கட்டங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மன உளைச்சல், விரையச் செலவுகள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் வந்து விலகும். தியானம், யோகாவில் ஈடுபடுவது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை உள்ள காலக்கட்டங்களில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கப் பாருங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் சட்டென்று பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். மாணவ-மாணவிகள் பாடங்களை சேகரித்து வைத்து ஒன்றாக படிக்காமல் அன்றைய பாடங்களை உடனே முடிப்பது நல்லது. கன்னிப் பெண்களுக்கு வயிற்று வலி, உயர் கல்வித் தடை வந்து விலகும். 2008 முற்பகுதியில் எதிர்பாராத பண வரவு, சொத்து சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம் யாவும் நிகழும்.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்குங்கள்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments