தன்மானம் உள்ளவர்களே! யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்களே! ஒளிவு, மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பலவகைகளிலும் அடிபட்டுக் கிடக்கும் உங்கள் மனதுக்கு இனி ஆறுதல் கிடைக்கும்.
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகள் மீது இருந்த வெறுப்புணர்வு நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும். உங்கள் மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வராது என நினைத்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும். ஏப்ரல் வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் மூத்த சகோதர வகையிலும், தாய்வழியிலும் நன்மை பிறக்கும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் 14.8.07 வரை கொஞ்சம் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.
உறவினர்கள்,நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்க்கவும்.எதிர்பாராத திடீர்ப் பயணங்களும்,அயல்நாட்டுப் பயணங்களும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 24.6.2008 முதல் 11.8.2008 உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். சிறுசிறு விபத்துகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் முன்பைவிட இப்போது அனுபவ அறிவு அதிகம் கிடைக்கும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து, அதற்கேற்ப அவர்களிடம் வேலை வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொள்வார்கள். பாராட்டுவார்கள். கன்னிப் பெண்களுக்கு உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் நீங்கும். காதல் இனிக்கும். கல்யாணம் முடியும். மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் படிப்பீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகல் தேடி வரும்.
பரிகாரம் :
விருத்தாசலத்தில் எழுந்தருளியிருக்கும் விருத்தகிரீஸ்வர், பெரியநாயகி அம்மையை சென்று வணங்குங்கள்.