பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். சுயகட்டுபாடு உள்ள நீங்கள், எவர ் தடுத்தும் கொள்கைகளை மாற்றிக்கொள் ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்து பலவகையில் முன்னேற்றங்களை கொடுத்து வந்த சனி பகவான் இப்போது சுகவீடான 4வது வீட்டுக்குள் நுழைகிறார். 4வது வீடென்றால் அர்த்தாக்ஷ்டமச்சனியாச்சே என்று பயப்படாதீர்கள்.
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியே சனிபகவான் தான். ஆகையால் உங்களுக்கு ஓரளவு நல்லதையே செய்வார். பழைய கடன் பிரச்சனை தீரும். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் சொத்த ு வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்களும், மனஸ்தாபங்களும் வந்து போகும். ஒருவரையருவர் அனுசரித்துப் போவது நல்லது.
வயிற்றுவலி, கால்வலி வந்து செல்லும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும், குடும்ப சூழ்நிலை புரிந்து நடந்துக் கொள்வார்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கன்னிப் பெண்கள் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். காதல் கசக்கும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனம் தேவை. புது வாகனமும் வாங்கும் யோகமும் உண்டு. திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி உதவி கேட்டு வருவார்கள்.
சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். குலதெய்வப் பிராத்தனைகளை முடிப்பீர்கள். மாணவ - மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் தொய்வு நிலை மாறும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையாட்களை அரவணைத்துச் செல்லுங்கள்.உணவு, மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தன ி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும். புத ு வேலை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.
இந்த சனிப் பெயர்ச்சி மாற்றம் உங்களின் நிறைக்குறைகளை அலசி ஆராய்வதுடன்,அணுபவ அறிவையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம ் : திருத்தணி முருகப்பெருமானை சஷ்டி திதியில் சென்று கந்தசஷ்டி கவசம் பாடி வணங்குங்கள். மனநிறைவு பெருகும்.