Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம்

Webdunia
தன்மானம் மிக்க நீங்கள், எதிப்புகள் பல இருந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டுக்குள் சனி பகவான் நுழைகிறார். நவம்பர் 2007 லிருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். பிரிந்து வருந்தி வாடியவர் களெல்லாம் சந்தேகம் நீங்கி சந்தோஷமாகச் சேர்வீர்கள்.

கணவன ்- மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுடன் வந்து கொண்டே இருந்தே, அந்த நிலை மாறி பரஸ்பரம் புரிந்துக்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் கவுரம் கூடும். பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்பட்டீகளே, இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

தாயாரின் உடல்நிலை லேசாகப் பாதிக்கும். தாய்வழி சொத்துக்களைக் கவனமாகக் கையாள்வது நல்லது. சனி நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தை இயக்கும்போது கவனத்தைச் சிதறவிடாதீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்கள் இனி திட்டவட்டமாக முடிவெடுப்பார்கள். திருமணம் நடக்கும். விலை ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தினர், நாட்டினரால் திடீர் திருப்பங்கள் உண்டு. அவ்வப்போது தூக்கமின்மை வந்துபோகும். கணவர ் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

மாணவ, மாணவிகளுக்கு நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கடினமான பாடங்களில் கூட கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகளை நெருக்கடிகள் நீங்கும். வேலையாட்களுடன் இனி உபத்திரவம் இருக்காது. நட்பு நயமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பங்குதாரர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர் களெல்லாம் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களை கொஞ்சம் அலைக்கழித்தாலும் இறுதியில் வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம் : மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனை வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். வறுமையைப் போக்கி வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments