Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீதமு‌ள்ள பாதாள அறையையு‌ம் ‌திற‌ப்பது ந‌ல்லதா?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (20:13 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பத்மநாபசாமி கோயிலில் திறக்கப்படாத பாதாள அறையில் மேலும் நிறைய இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த பாதாள அறையைத் திறக்கக் கூடாது. அப்படி திறந்தால் நீர் உள்ளே புகுந்துவிடும் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரியான நிலையில், அந்த பாதாள அறையை அப்படியே விட்டுவிடுவது நல்லதா? அல்லது அதனைத் திறந்து அதிலுள்ளவற்றை எடுத்து அதைப்பற்றி தெரிந்துகொண்டு அவற்றை நல்லபடியாக பாதுகாக்கலாமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: என்னைப் பொறுத்தவரையில், தொட்டுவிட்டார்கள் இனிமேல் அதில் சொச்சம் வைக்காமல் இருப்பதுதான் நல்லது. புதைப்பொருட்களைப் பொறுத்தவரையில் எடுத்தால் முழுமையாக எடுத்துவிட வேண்டும். பொதுவாக இதுபோன்ற புதைப்பொருட்களை கருநாகங்கள் காவல் காக்கும். தெய்வீகப் பொருட்கள், விலை உயர்ந்த பத்திரை மாற்றுத் தங்கங்கள், ரத்தினங்கள், ஐம்பொன் சிலைகள், தங்கச் சிலைகள் இதெல்லாம் இருக்கும் இடங்களிலெல்லாம் கருநாகம் இருக்கும். இதனை அனுபவப்பூவர்மாகவே நம்மால் சில இடங்களில் அறிய முடிகிறது.

அதனால்தான் இதுபோன்ற அறைகள் இருக்கும் கதவுகளில் பாம்பு படங்களை வரைந்து வைத்திருப்பார்கள். ஏனென்றால் பாம்புதான் அந்தக் காலத்தில் காவலுக்குப் பிரதானம். அதிலும் கருநாகம் குறிப்பிடத்தக்கது. அதனுடைய மூச்சுக் காற்று பட்டாலேயே மனிதனுடைய ஜீவன் பிரியக்கூடிய அளவிலெல்லாம் இருந்திருக்கிறது. அதனால் அந்த அறையையும் பிரித்துப் பார்த்துவிடுவது நல்லது. அதனைப் திறக்காமல் விட்டாலும் தோஷமாகும். ஏனென்றால் ஒன்றை எடுத்துவிட்டு மற்றொன்றை எடுக்காமல் விட்டால் அதன் சமநிலை சீர்கெடும். அதனால் முழுமையாக எடுத்துவிடுவது நல்லது.

ஆனால், அவர்கள் எடுத்துவிட்ட பிறகு அந்தக் கோயிலினுடைய வைப்ரேஷன் கொஞ்சம் மாறும். அப்படி அது மாறாமல் இருப்பதற்கு, ஆகம விதிப்படி சில மாற்றுகளை செய்துகொள்வது நல்லது. வேறு ஏதோ பொருட்களை வைத்து நிறைப்பது நல்லது. அந்த அறைகளை காலியாக வைக்காமல் ஏதாவது ஒரு பொருளால் நிரப்பி வைக்க வேண்டும். அப்படி செய்தால் நல்லது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments