Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகல் கனவுகளுக்கு பலன் உ‌ள்ளதா?

பகல் கனவுகளுக்கு பலன் உ‌ள்ளதா?
, திங்கள், 23 மே 2011 (18:23 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: மதிய வேளைகளில் கண்களை மூடிய உடன் திடீரென ஒரு கனவு வருகிறது. பகல் கனவு. இதுபோன்ற கனவுகளுக்கு ஏதேனும் சிறப்பு உண்டா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கனவுகள் என்று பார்க்கும் போது பிராய்ட் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நிறைவேறாத ஆசைகள், ஆழ்மனம், உணர்வற்ற நிலையில் இருந்து வெளிப்படுவது கனவுகள் என்கிறார்கள்.

ஆனால் இதையே நம்முடைய முன்னோர்கள், பகல் கனவு, படுத்த உடனேயே வரும் கனவு போன்றவற்றிற்கெல்லாம் பலன் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வரக்கூடிய கனவுகளெல்லாம் நம்முடைய இச்சைகளினுடைய வெளிப்பாடு. ஆழ் மனத்தினுடைய நிறைவேறாத ஆசைகளுடைய வெளிப்பாடு. அதுபோன்றவைதான் அந்த நேரங்களில் வந்து போகும். இதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை.

ஆனால் நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகு வரக்கூடிய கனவுகளைத்தான் காலங்களாக பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரவு 12.30 மணி முதல் 2 மணிக்குள் வரும் கனவு 3 மாதங்களில் நிறைவேறும். 2 மணியிலிருந்து 3 மணிக்குள் காணும் கனவு ஒரு மாதத்தில் நிறைவேறும். 3 மணியிலிருந்து 5.30 மணிக்குள் காணக்கூடிய கனவு உடனடியாக நிறைவேறும் என்று பட்டியலிட்டுப் பிரித்திருக்கிறார்கள். நம்மிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் சோதித்துப் பார்க்கும் போது இது சரியாகவும் இருக்கிறது.

குறிப்பாக விடியற்காலை கனவுகள், சுக்ரோதயம் நேரத்தில் அதாவது 3 மணி முதல் 5.30 மணி வரை வரும் கனவுகள் உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil