Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏன்?

ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏன்?
, செவ்வாய், 17 மே 2011 (18:48 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது எதனால்?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: யாரையுமே கிரகங்கள் விட்டு வைப்பதில்லை. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, சாதாரணமான மாடு மேய்க்கும் குடிமகனாக இருந்தாலும் சரி. ரஜினி மகர ராசிக்காரர். இவருக்கு 4ஆம் இடத்தில் குரு வந்திருக்கிறார். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாக அதனுடைய தாக்கம் இருக்கும்.

4ஆம் இடம் என்பது சுகஸ்தானம். சுகஸ்தானத்தில் குரு வந்தால் சகவீனம். இதுபோன்ற அமைப்புகளைத்தான் குரு கொடுப்பார். ஏனென்றால் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர் ரஜினி. அதனால், இந்த 4ஆம் இடத்து குரு அடுத்தடுத்து உடல்நலக் குறைவுகளை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.

அடுத்து, நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய உடல்நலம் மேலும் கஷ்டம் கொடுக்கும். இந்த மாதிரியான அமைப்புகள்தான் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவர் தன்னுடைய உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பின் போது, நடிக்கும் போது அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil