Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சில‌ர் எ‌ப்போது‌ம் ஒரு‌வித அ‌ச்ச‌த்‌தி‌ல் இரு‌க்க‌க் காரண‌ம் எ‌ன்ன?

‌சில‌ர் எ‌ப்போது‌ம் ஒரு‌வித அ‌ச்ச‌த்‌தி‌ல் இரு‌க்க‌க் காரண‌ம் எ‌ன்ன?
, வெள்ளி, 25 மார்ச் 2011 (19:26 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நகர வாழ்க்கையில் இருப்பவர்களிடம் பொதுவாக பலரிடம் பார்க்கிறோம். சிலர் எப்போதும் ஏதாவது ஒரு அச்சத்தில் இருக்கிறார்கள். வாழ்க்கை, எதிர்காலம், பெண் திருமணம், கல்வி என்று இப்படியெல்லாம் இருக்கக்கூடிய அச்சத்திற்குக் காரணம் என்ன? பரிகாரம் என்ன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சில ராசிகள் முன்னெச்சரிக்கை ராசிகளாக இருக்கி‌ன்றன. கடக ராசிக்காரர்கள் எப்பொழுதுமே ஒருவிதமான விழிப்புணர்வுடனேயே இருப்பார்கள். இவர்களெல்லாம், அடுத்த வாரம் வேலை நிறுத்தம் என்று அறிவிப்பு வருகிறதென்றால், உடனேயே எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

இதேபோல விருச்சிக ராசிக்கும் இந்தக் குணம் உண்டு. சவால்களை எதிர்கொள்ளத் தயாராவது என்று சொல்வார்களே, அதுபோன்ற உஷாருடன் இருப்பார்கள். இவர்களுக்கு ஒருவிதமான பயம் இருந்துகொண்டே இருக்கும். இந்த இரண்டு ராசிகள்தான் இதுபோன்ற அமைப்புகளில் வருகிறார்கள். மற்ற ராசிகளுக்கெல்லாம் விழுக்காடு குறையும்.

மீன ராசிக்காரர்களும் இதுபோன்ற உஷாராக இருக்க நினைப்பார்கள். ஒருவிதமான பொறுப்புணர்வுடன் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பையனுக்கு சீட் கிடைக்கவில்லை, சீட் கிடைத்தால் சரியாகப் படிக்கவில்லை, சரி படிக்க ஆரம்பித்துவிட்டால் அடுத்தது என்ன ஆகுமோ என்று தெரியவில்லை என்று தொடர்ச்சியாகக் கொண்டு போவார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருக்கும் போதும், லக்னாதிபதி, மேஷம் என்றால் லக்னாதிபதி செவ்வாய், ரிஷபம் என்றால் சுக்ரன், மிதுனம் என்றால் லக்னாதிபதி புதன். இதுபோன்ற லக்னாதிபதி என்று சொல்லக்கூடிய ஆளுமையில்தான் இவர்கள் இருக்கிறார்கள். இந்த லக்னாதிபதி கெட்டிருந்தாலும் ஒருவிதமான பதற்றம், படபடப்பு, எதிர்காலம் குறித்த கேள்விக்குறி, வெற்றிபெற முடியுமோ முடியாதோ என்ற அச்சம் இருந்துகொணடே இருக்கும். இதற்கு அந்த கிரகத்திற்குரிய வகையில் தியானம், யோகா போன்று செய்துகொள்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil