Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நிலவு பூ‌மி‌க்கு அரு‌கி‌ல் வருவதா‌ல் பேர‌ழிவுக‌ள் ஏ‌ற்படுமா?

‌நிலவு பூ‌மி‌க்கு அரு‌கி‌ல் வருவதா‌ல் பேர‌ழிவுக‌ள் ஏ‌ற்படுமா?
, செவ்வாய், 15 மார்ச் 2011 (19:22 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வரும் 19ஆம் தேதி நிலவு தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 21 ஆயிரம் மைல் - கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இது சுழற்சிப் பாதையில் ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வுதான். ஒருகட்டத்தில் தூரத்தில் இருப்பதும், ஒருகட்டத்தில் அருகில் வருவதும் என்பது. ஆனால் 19ஆம் தேதி அன்று பூமிக்கு மிகவும் அருகில் வருவதனால் இழப்புகள் ஏற்படும், இயற்கை சீரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கருத்து சொல்லியிருக்கிறார்கள். சிலர் ஜப்பான் பூகம்பத்தோடும் இணைக்கிறார்கள். அது குறித்து கூறுங்களேன்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: 19ஆம் தேதி சனிக்கிழமை அது நிகழ்கிறது. அன்றைக்கு பெளர்ணமியும் கூட. பொதுவாகவே பெளர்ணமி அன்று ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும். ஈர்ப்பு சக்தி, புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். வரப்போகிற வருடம் கர வருடம். அந்த கர வருடத்தின் ராஜாவாகவே சந்திரன்தான் வரப்போகிறார். ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் பார்க்கும் போது ஏகாதிபதியாக, ராஜாவாக, மந்திரியாக யார் வருகிறார்கள் என்று பார்ப்பார்கள்.

தற்போது விக்ருதி வருடம் நடந்து கொண்டிருக்கிறது. இது முடிந்து ஏப்ரல் 14ஆம் தேதி முதல் கர வருடம் வரப்போகிறது. அப்படி வரப்போகும் கர வருடம் சந்திரன் ஆதிக்கத்தில்தான் வரப்போகிறது. சந்திர ஆதிக்கம் உள்ளவர்களுக்கு இந்த நிலவு நெருங்குவது என்பது ஒரு பெரிய சக்தியை கொடுக்கக் கூடியதாக இருக்கும். சந்திரனுடைய நட்சத்திரம் என்று சொல்லக்கூடியது ரோகினி, அவிட்டம், திருவோணம் ஆகும். ராசி கடகம். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கெல்லாம் சாதகமான பலன் கிடைக்கும். அவர்களுடைய பலம் அதிகரிக்கும், நிர்வாகத் திறமை அதிகரிக்கும், சூழல் பெருகும், குழப்பம் தடுமாற்றத்தில் இருந்து தெளிவான முடிவை எடுப்பது, பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்வது போன்றெ அமைப்பெல்லாம் இவர்களுக்கு உருவாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சில பாதிப்புகள் உருவாகும். குறிப்பாக சிம்ம ராசிக்கார்களுக்கு இந்த நிலவு நெருங்குவது எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும். சில இழப்புகள், ஏமாற்றங்கள் கொடுக்கும். ஏனென்றால் கடகத்திற்கு எதிர்மறை கதிர்வீச்சு உள்ளது சிம்மம். இந்த நிலவு நெருங்குவதால், கடகத்தோடு 8வது ராசி கும்பம். அதாவது சந்திரனுடைய 8வது ராசி கும்பம். அவர்களுக்கும் உடல்நலக் குறைவு, மன இறுக்கம், மன அழுத்தம் போன்று கொடுக்கும்.

பொதுவாகவே சந்திரன் பூமியை நெருங்கினால் சைலண்ட் அட்டாக் - அறிகுறியில்லாத மாரடைப்பு அதிகமாகும். எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென இறந்துவிட்டார் என்று சொல்வார்களே அதுமாதிரி அதிகரிக்கும். அடுத்து உலகெங்கும் மக்களிடையே எதிர்மறை எண்ணங்களும், வக்கிர புத்தியும் அதிகரிக்கும். மற்றொரு பக்கத்தில் கலை வளரும். பழைய கலைகள், புராதன கலைகள், பாரம்பரியக் கலைகள் வளரும். அதற்கடுத்து, மறைந்து அழிந்து போகக்கூடிய நிலையில் இருக்கக் கூடிய மொழிகள் - சந்திரன் மொழிகளுக்கு உரிய கிரகம் - பாதுகாக்க சில திட்டங்கள் உலகெங்கும் உருவாகும். இதுபோன்று ஒரு பக்கம் பாதிப்பு, மறுபக்கம் செழிப்பு இருக்கும்.

மேலும், காடுகள் செழிப்படையும். மூலிகைப் பயிர், மூலிகை உணவு இதற்கெல்லாம் முக்கியத்துவம் கிடைக்கும். அதற்கடுத்து, சமீப காலமாக ஆண் வாரிசுகள் அதிகமாகி வருகிறது. சந்திரனுடைய ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் பெண் குழந்தைப் பிறப்பு அதிகரிக்கும். பெண்கள் சாதிப்பார்கள். எல்லா துறையிலும் ஆண்களைத் தாண்டி பெண் சாதிக்கக் கூடிய அமைப்பு இந்த சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் ஆகர்ஷண சக்தி, ஈர்ப்பு விசையால் உண்டாகும்.

இயற்கை அழிவுகள் எப்படி இருக்கும்?

இயற்கை அழிவுகள் உண்டு. எப்படியென்றால், பூமியின் மீது சந்திரனுடைய ஒளிக்கற்றைகள் அதிகமாக விழ ஆரம்பிக்கும் போது - அதனால்தான் மக்களிடையே பாதிப்பு என்று சொன்னனே‌ன் - இயற்கை சீற்றம் அதிகரிக்கும். சந்திரன் என்பது ஜல கிரகம் என்று சொல்கிறோம். வாட்டர் சைன் பிளானட். அப்படி பார்க்கும் போது நீர்நிலைகள் கொந்தளிக்கும். கடல் கொந்தளிக்கும், மழை பொழிவு அதிகரிக்கும். விடா மழை, தொடர் மழை, கன மழை அதிகரிக்கும். அடுத்து திடீரென ஏரிகள் உறைந்து போவது. நம்முடைய பகுதிகளில் அது மாதிரி ஆனது கிடையாது. ஆனால் அது மாதிரி கூட நடக்க வாய்ப்புள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு உண்டாதல், கால்நடைகளான ஆடு, மாடுகள் மடிதல் போன்றவை நடைபெறும். ஏனென்றால் சந்திரனுடைய ஆகர்ஷண சக்தியால் இதுபோன்று பாதிப்புகள் உண்டாகும். சில பயிரினங்கள், உயிரினங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil