Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ழிவு ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌‌‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் குண‌‌ங்க‌ளிலு‌ம் வெ‌ளி‌ப்படுமா?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2011 (19:51 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: அசுவினி, பரணி, கார்த்திகை ஆகிய நட்சத்திரங்கள் அழிவு நட்ச‌த்திரங்கள் என்று சொன்னீர்கள். இந்த நட்சத்திரங்களை ஜென்ம நட்சதிரங்களாகக் கொண்டவர்களும் அழிப்பது என்ற குணத்தைக் கொண்டவர்களாக இருப்பார்களா?

ஜோ‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: அதாவது, சில முக்கியக் காரியங்களை இந்த நட்சத்திரங்களில் செய்யக்கூடாது என்பார்கள். பொதுவாக இந்த மூன்று நட்சதிரக்காரர்களுக்கும் ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, அந்தப் பையனால்தான் அந்தக் குடும்பமே முன்னுக்கு வந்தது. அந்தப் பையன் பரணியில் பிறந்தவன். திடீரென்று அந்தப் பையன் இந்த மாதிரியான காரியத்தை செய்துவிட்டார். அதிலிருந்து அவருடைய அப்பா மிகவும் மணமுடைந்துவிட்டார். அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்வார்களே, அதுபோன்ற சில விஷயங்கள் நடக்கும்.

அதனால்தான், இந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் பொதுவாக எதிர்மறையாகப் பேசுவது, எதிர்மறை காரியங்களில் ஈடுபடுவது என்பது கூடாது. அப்படி கொஞ்சமாவது ஈடுபட்டாலும் அதிகமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அதிக நேரம் கோபப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கொஞ்ச நேரம் கோபப்பட்டாலே இழப்புகள் அதிகமாக இருக்கும். சில ராசிக்காரர்கள், நட்சத்திரக்காரர்கள் அதிகம் கோபப்பட்டாலும் கூட அது அதிகம் எடுபடாது. ஆனால் இந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் கோபப்ட்டாலும் ஆக்ரோஷமும், உத்வேகமும் அதிகமாக இருக்கும்.

அந்த ராசிக்கார்களைத்தான் இது பாதிக்குமா?

ஆமாம், அவர்களுக்குத்தான் அந்த இழப்புகளும், ஏமாற்றங்களும். அதானல்தான் இந்த ராசிக்காரர்கள் சில மோதல்கள் போன்றவற்றிறெல்லாம் ஈடுபடாமல், சமாதானமாக சுமூகமாக நடந்துகொண்டால் நல்லது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments