Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெ‌ன் இ‌‌ந்‌தியா‌வி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் ‌நிலை?

தெ‌ன் இ‌‌ந்‌தியா‌வி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் ‌நிலை?
, திங்கள், 24 ஜனவரி 2011 (18:32 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸில் இருந்து விலகி புது கட்சி துவங்க உள்ளார். புதுச்சேரியில் இதேபோல ரங்கசாமியும் தனிக்கட்சி துவங்க உள்ளார். தமிழ்நாட்டில் பரவலான காங்கிரஸ் எதிர்ப்பு. இதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொடுக்கும்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: காங்கிரஸ் கட்சியினுடைய தலைமை சோனியா காந்தி. அவர்கள் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி. அவர்களுக்கு மிகக் கடுமையான, மோசமான காலகட்டம் இது. எல்லா வகையிலும் நெருக்கடி என்று சொல்லக்கூடிய மோசமான காலகட்டம் இது.

10இல் குரு பதவியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த மாதிரி நேரத்தில்தான் இவர் பதவியைக் ஏற்றுக்கொண்டார்கள். மீண்டும் தலைவியாக ஆனார்களே, அது கூடாது. இந்த நேரத்தில் அவருடைய பதவியை அவர் விட்டுக் கொடுத்திருக்கலாம். யாருக்கு நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் மே மாதம் 8 ஆம் தேதி வரைக்கும் குரு 10இல்தான் இருப்பார். அதனால் மே வரைக்கும் காங்கிரஸ் பல நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்திக்கக்கூடிய அமைப்புகள் ஜோதிடப்படி உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil