Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2011இ‌ல் அர‌சிய‌ல், பொருளாதார‌ம் எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

2011இ‌ல் அர‌சிய‌ல், பொருளாதார‌ம் எ‌ப்படி இரு‌க்கு‌ம்?
, வியாழன், 30 டிசம்பர் 2010 (18:37 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 2011இல் நாட்டின் பொருளாதாரம். அரசியல், சூழல் அதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் எப்படி இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: நாட்டின் பொருளாதாரம் என்றால் குரு நட்சத்திரத்தில்தான் வருகிறது. குரு பகவான் தனக்காரகன்தான். ஆனால் நாட்டின் பொருளாதாரம் ஒரு விதமாகத்தான் இருக்கும். இவர்கள் அளிக்கும் புள்ளி விவரங்கள் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் உண்மையில் பொருளாதார சீரழிவுகள், பொருளாதார இறக்கங்கள், பண வீக்கம் இதுபோன்று இந்த ஆண்டில் இருக்கும்.

விசாக நட்சத்திரத்தின் 4 பாதமும் ஒரே ராசியில் இடம் பெறுவதில்லை. 3 பாதம் ஒரு ராசியிலும், கடைசி பாதம் இன்னொரு ராசியிலும் வரும். அதாவது 3 பாதம் துலாத்தில் இருக்கும். இது 4ஆம் பாதம். இந்த 4ஆம் பாதம் மட்டும் விருச்சிகத்தில் இருக்கிறது. இந்த விருச்சிகத்தில் வருவதால்தான் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள், நெருக்கடிகள் போன்ற சில பாதிப்புகளை உருவாக்கும்.

அடுத்து அரசியலில் சில மாற்றங்களையும் உண்டாக்கும். அதாவது, பண பலத்திற்கும், மக்கள் பலத்திற்கும் இடையே பெரிய யுத்தமே நடக்கும். அழிவிற்குரிய நட்சத்திம் என்பதால் போட்டிகள் கடுமையானதாக இருக்கும். யுத்தங்கள், போட்டிகள் கடுமையாகி அதன்பிறகு மகிழ்ச்சியான செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இந்த விசாகத்தால் அரசியல் மாற்றங்கள் நிறைய நிகழும்.

Share this Story:

Follow Webdunia tamil