Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ன்கூ‌ட்டியே அ‌றியு‌ம் ச‌க்‌தி உ‌ண்மையா?

மு‌ன்கூ‌ட்டியே அ‌றியு‌ம் ச‌க்‌தி உ‌ண்மையா?
, வெள்ளி, 3 டிசம்பர் 2010 (19:00 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடைபெறுவதற்கு முன்பு சிலருக்கு சில அறிகுறிகள் தெரியும் அல்லது சில நிகழ்வுகள் அவர்களுக்கு நடக்கும் என்று கூறுவது உண்மையா? அது எப்படி ஏற்படுகிறது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு 5ஆம் இடம் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள். அந்த பூர்வ புண்ணியஸ்தானத்தில் சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் ஒரு இன்டியூஷன் பவர் (உ‌ள்ளுண‌ர்வு ச‌க்‌தி) அவர்களுக்கு உண்டு. சங்க கால நூல்களில் பார்த்தீர்களானால் நிமித்தம், அசரீரி என்றெல்லாம் சொல்வார்கள்.

உதாரண‌த்‌தி‌ற்கு, அவர் வெளியில் வந்தார் உடனே காக்கை வடமிருந்து இடமாகப் போய்விட்டது. அதனால் அவர் திருப்தியில்லை என்று சொல்லிவிட்டார். அதனால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார். சில நிமித்தங்களையும் நாம் பார்க்க வேண்டும். நிமித்தங்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டாலேயே நமக்கு இன்டியூஷனெல்லாம் வர ஆரம்பிக்கும்.

நிமித்தங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?

நிமித்தங்கள் என்பது சகுனங்கள் என்று சொல்வோமே அதுதான். அறிகுறி. "தும்மலில் போனாலும் தூறலில் போகாதே". தூறல் என்பது ஒரு நிமித்தம். தூறலில் போகக்கூடாது. தூறலில் போனால் தொல்லை உண்டு. அதை நாம் கடைபிடிக்க வேண்டும். 5ஆம் இடத்தில் வகித்திருந்தால் இன்டியூஷன் உண்டு. அவர்களுக்கு சாதாரணமாகவே தோன்றும். உட்கார்ந்து ஜோதிடர் மாதிரி கணக்கு போட்டு அவர்கள் சொல்ல வேண்டாம். எனக்கென்னமோ திடீரென்று தோன்றுகிறது என்று சொல்வார்கள்.

சில பெண்கள், மிகவும் தெய்வீகமாக, யாருக்கும் கெடுதல் செய்யாமல், நாத்தனார், மாமியார் என எல்லோரையும் அனுசரித்துப் போகிற பெண்மணிகளெல்லாம் சட்டென்று சொல்லிவிடுவார்கள், இது சரியில்லை என்று. யாரையாவது வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பார்த்து, நீங்கள் பார்ப்பதற்கே சரியாகயில்லையே, கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்று சொல்லிவிடுவார்கள். அதனால் பெரும் பிரச்சனையே உருவாகிவிடும். இப்படியெல்லாம் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil