தமிழ ். வெப்துனிய ா. காம ்: தற்பொழுதுள்ள நிலையில், தமிழ்நாடு அளவிலோ அல்லது இந்திய அளவிலேயோ கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? உதாரணத்திற்கு, தி.மு.க., அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் உண்டா?
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன ்: கூட்டணி என்று பார்த்தால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
தலைவர்களுடைய ஜாதகத்தைப் பார்க்கும் போது, கருணாநிதியும், சோனியா காந்தியும் பக்கத்து பக்கத்து ராசி. கருணாநிதி ரிஷப ராசி, சோனியா மிதுன ராசி.
பக்கத்துப் பக்கத்து ராசிக்கு எப்பவுமே கொஞ்சம் பரஸ்பரம் அணுகூலம் என்பது போல இருக்கும். அதனால் அது தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
அ.தி.மு.க.வுடன் வேறு சில கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் உண்டு.