Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தீபாவளியின் தனிச் சிறப்பு?

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2010 (18:25 IST)
தமிழ்.வெப்துனியா.காம ்: வரப்போகும் நவ‌‌ம்ப‌ர் 5 தீபாவளிக்கு ஏதேனும் தனிச் சிறப்பு உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்த வருட தீபாவளி வெள்ளிக்கிழமையும், சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. அதனால் வெடி வெடிப்பது அதிகமாகும். ஏனென்றால் சித்திரை செவ்வாயுடைய நட்சத்திரம், செவ்வாய் நெருப்புக்கும் அதிபதி. அதனால் கிட்டத்தட்ட மதியம் 1 மணி வரை வெடிச் சத்தம் அதிகமாக இருக்கும்.

துலாம் ராசியில் இந்த முறை தீபாவளி வருகிறது. அதனால் மக்களுடைய மகிழ்ச்சி இந்த முறை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் விபத்துகளும் அதிகமாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் வருவதால் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில், தீபாவளி என்றாலே தானம் செய்வது நல்லது. செவ்வாய் நட்சத்திரத்தில் வருவதால் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பங்காளி பிரச்சனை, தகராறு போன்றவைகளால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதற்கான முயற்சி இந்த நட்சத்திரத்தில் பலன் கொடுக்கும். அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments