Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவில் மழை, வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டது எதனால்?

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2010 (18:20 IST)
தமிழ்.வெப்துனியா.காம ்: சமீபத்தில் பெய்த மழை இந்தியா மட்டுமல்லாது, ஆசியா முழுவதும், பாகிஸ்தான், சீனா, மங்கோலியா போன்ற நாடுகளில் பெரும் பகுதி மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவிற்கான பாதிப்பு எதனால்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: மழைக்குரிய கோள் என்று சொன்னால் வெள்ளி (சுக்ரன்). இந்த சுக்ரனுடைய இயக்கம் நடுநடுவில் வக்கிரமாக இருக்கிறது. சில நேரங்களில் அதிகமான வக்கிரமாக ஆகிறது.

செப்டம்பர் 2ஆம் தேதி வந்த சுக்ரன் ஜனவரி 2ஆம் தேதி வரைக்கும் ஒரே வீட்டில் இருக்கிறார். ஏறக்குறைய 28 முதல் 32 நாட்களுக்கு ஒருமுறை வேறு வீடு மாறக்கூடிய சுக்ரன், ஒரே வீட்டில் தொடர்ந்து அமர்ந்திருக்கிறார்.

நடந்த நிகழ்வுகளையெல்லாம் எடுத்து ஆய்ந்து பார்க்கும்போது, வெள்ளி நீச்சமாகும் போது, பகைக் கோளுடன் சேரும்போது அல்லது இதுபோன்ற வக்கிர நிலையில் இருக்கும் போதெல்லாம் இந்த மாதிரியான மழை, வெள்ளம் பாதிப்புகள் ஏற்படுகிறது.

அந்தந்த நாட்டினுடைய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து இந்தந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும் என்று கணக்கிடலாம்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் திருநெல்வேலி செவ்வாயுடைய ஆதிக்கத்தில் வருகிறது. அங்கிருக்கும் கிரக அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது இது தெரியும். இதுபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் அங்கிருக்கக் கூடிய காரணிகள், பொருட்கள், இடம்பெற்றிருக்கக் கூடியவைகள் இதையெல்லாம் வைத்து இந்தந்த கிரகங்களின் கீழ் வருகிறது என்று சொல்லலாம்.

இதுபோல, அந்தந்தப் பகுதிகளின் ஜாதகங்களை வைத்து என்னென்ன நடக்கும் என்பதைச் சொல்லலாம். இதெல்லாம் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள்.

தற்பொழுது வெள்ளி அதாவது சுக்ரன் இடையூறுகளுக்கு உள்ளாவதால் இதுபோன்று கன மழை, சில பகுதிகளில் கடுமையான வறட்சி, 10 வருடங்களில் பெய்ய வேண்டிய மழையை ஒரு சில மணி நேரத்தில் பெய்துவிட்டுப் போவது போன்றதெல்லாம் நடக்கிறது. இது இனிமேலும் தொடரும். ஏனென்றால் சுக்ரனுடைய அமைப்பு தற்பொழுது அப்படித்தான் இருக்கிறது.

வடகிழக்கு பருவ மழையிலும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்குமா?

தமிழ்நாட்டிற்கும் இதுபோன்ற பாதிப்பு வாய்ப்புகள் இருக்கிறது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments