Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரக அமைப்பும் அசைவ உணவும்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2010 (18:13 IST)
தமிழ்.வெப்துனியா.காம ்: புதன் கிரகத்தை குறிப்பிடும்போது சைவ உணவிற்குரிய கிரகம் என்று குறிப்பிட்டீர்கள். இதுபோல அசைவ உணவிற்கும் கிரகங்கள் இருக்கிறதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: சனி, ராகு, கேது போன்ற ராசிகளின் பார்வையில் உள்ளவர்கள் கொஞ்சம் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள். இதில், சைவ உணவிலேயே கொஞ்சம் அசைவத் தன்மை கொண்டதாக சில உணவுகள் இருக்கிறதல்லவா - காலிஃபிளர், காளாண் போன்றவைகள், அவைகளை அதிகம் வறுத்துச் சாப்பிடுவது போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் சைவம். அவருடைய நண்பர் ஒருவர் அசைவம். அசைவ நண்பர் சிக்கன் 65 சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சைவ நண்பர் அவருடன் உட்கார்ந்துகொண்டு காலிஃபிளவர் பிரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபோலவும் இந்த கிரக அமைப்பு உள்ளவர்கள் இருப்பார்கள்.

பொதுவாக சனி, ராகு, கேது இருந்தால் பொறித்தது, வறுத்தது, நடப்பன, பறப்பன போன்று குத்து வெட்டு என்று உணவு இருக்கும்.

செவ்வாய் காரமான உணவு. சூரியனுக்கு இயல்பான உணவு. அப்படியே நெருப்பில் போட்டு சாப்பிட்டுவிட்டார், கம்பியில் காட்டி சுட்டு சாப்பிடுகிறார் என்று சொல்வார்களே அந்த மாதிரி.

மேலும் சுக்ரன் ராகு உடன் சேர்ந்தாலும் அசைவ உணவுகளை சாப்பிட வைக்கும். தசாபுத்தியை வைத்து எந்த மாதிரியான உணவுகளில் நாட்டம் இருக்கும், எந்த கிரகம் அவர்களை ஆட்சி செய்கிறது என்பதை கண்டறிந்தாலே தெரிந்துவிடும்.

குரு, சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்தினால் பால், மோர், தயிர், நெய், சர்க்கரைப் பொங்கல் இந்த மாதிரியான உணவுகளில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments