Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-சீனா இடையே மோதல் வருமா?

இந்தியா-சீனா இடையே மோதல் வருமா?
, வியாழன், 16 செப்டம்பர் 2010 (17:55 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கொஞ்ச காலமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டு எதிரி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான ரகசிய வேலையில் சீனா ஈடுபடுவது. விசா கொடுப்பதில் இருக்கும் பிரச்சனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படுத்தும் பிரச்சனை என்று எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு மோதலை நோக்கி இந்தியாவும், சீனாவும் போவது போல் தெரிகிறது. இது எந்த அளவிற்கு இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு அல்லது எதிர்ப்பு, பகைமை எப்படி இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எப்படிப் பார்த்தாலும், இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது சீனாவால் நமக்கு நிறைய தொந்தரவுகள் உண்டு. அதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், தற்பொழுது இந்தியாவினுடைய கிரக அமைப்புகள் சாதமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் முடிவு, அதாவது 27.12.2011க்குப் பிறகு சனி மாறுகிறார். அப்படி சனி மாறும் போது இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் உண்டாகும்.

இந்தியா சனியோட ஆதிக்கம் பெற்ற நாடு. சனி எதிரான கிரகம் என்பது செவ்வாய். இந்த செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுதான் சீனா. செவ்வாய்தான் கம்யூனிஸத்திற்கும், செம்மை நிறத்திற்கும் உரிய கிரகம். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்போதுமே ஆகாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் சீனாவால் இந்தியாவிற்கு பிரச்சனைகள் வரும். குறிப்பாக 2012, 2013, 2014 காலகட்டங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாக இருக்கும். அதில் இந்தியாவிற்குள்ளேயே சில உள்நாட்டுக் குழப்பங்கள், நக்சலைட்டுகள் தூண்டுவிடப்படுதல் போன்றதெல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு சீனாவால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கிடக்கிறது.

இந்தியாவினுடைய அண்டை அயல்நாடுகள் அனைத்தையுமே சீனா தனக்கு கையடக்கமாக வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவை இயக்கக் கூடிய கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை இருக்கிறது. சீனா முழுக்க முழுக்க செவ்வாயினுடைய ஆதிக்கம் பெற்ற நாடாக இருந்தாலும் அதனுடைய யோகாதிபதியாக வருவது புதன்.

புதன் எப்படியென்றால், பதுங்கியிருந்து பாய்தல், பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்வார்களே அந்த மாதிரியான சில வேலைகளையெல்லாம் சீனா செய்து வருகிறது. ஏனென்றால் புதனுடைய அமைப்பு அந்த மாதிரியானது. சந்தையில் ஒரு தரமான பொருள் வந்தால் அதேபோன்ற பொருளை உருவாக்குவார்கள். இதனை இமிடேஷன் என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன்தான். இதுபோன்ற பல சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதனால் எப்படிப் பார்த்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஆள்பவர்கள் விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil