தமிழ்.வெப்துனியா.காம ்: சீன அட்டவணை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், பிள்ளை பெற்றுக் கொள்வதற்கு. அந்த அட்டவணையை கடைபிடித்து பையனைப் பெற்றுக் கொண்டேன், பெண்ணைப் பெற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கை குறிப்பிட்டு பூனை ஆண்டு, புலி ஆண்டு, சிங்க ஆண்டு என்று கூறுகிறார்கள். நாம் ஒவ்வொரு ஆண்டையும் பிரபவ, விபவ, சுக்ல என்று சில பெயர்கள் வைத்து 60 ஆண்டுகள் இருக்கிறது.
இதுபோல அவர்கள் விலங்குகளின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அந்த பூமி இருக்கிறதல்லவா, அந்த மாகாணம், அந்த பீடம் அதற்கு அது ஒத்துப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எண்ணம் செயலாகிறது. அவர்கள் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுடைய உடலில் நாடி, நரம்புகளில் சில மாற்றங்களை உருவாக்குகிறது. அவர்கள் பூமிக்கு அது ஒத்துவரலாம். நமக்கு அவ்வளவாக சரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.