Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொ‌ழி‌‌ற்சாலை அமை‌ப்பதா‌ல் ஊரு‌க்கு‌த் ‌தீ‌ங்கு...

தொ‌ழி‌‌ற்சாலை அமை‌ப்பதா‌ல் ஊரு‌க்கு‌த் ‌தீ‌ங்கு...
, திங்கள், 31 மே 2010 (18:15 IST)
ஒரு தொழிற்சாலை அமைப்பதனாலஒரு ஊருக்கு தீங்கு வருகிறது. பெரிய பாதிப்பெல்லாம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் என்ன பரிகாரம், பூஜையால் அந்த தீமைகளைத் தடுக்கலாம்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்:

முதலில் அந்த ஊர் வாஸ்துவை பார்க்க வேண்டும். ஊருடைய எந்த எல்லையில் அந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாக ஊருடைய தென் பகுதியில் தென்கிழக்கு, தென்மேற்குப் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்தால் எந்தத் தவறும் இல்லை. மேற்குப் பகுதியில் கூட அமையலாம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு பகுதிகளில் தொழிற்சாலை அமைந்தால் அதனால் பாதிப்புகள் உண்டாகும். அப்பொழுது, அது எந்தவிதமான தொழிற்சாலை என்பதைப் பார்க்க வேண்டும். இரும்புப் பொருள் உற்பத்தி செய்யக் கூடியதா...

(எரி சாராயம் ‌தொ‌ழி‌ற்சாலை. ஊரினுடைய வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது)

அது கூடாது. இது பாதிப்பை ஏற்படுத்தும். ரசாயனமாக இருப்பதால், ஈசானியத்தில் வருவதால் மக்களை பாதிப்படையச் செய்யும். அந்த ஊருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈசானியத்தில் இல்லாமல் வேறு பகுதியில் ஆரம்பித்தால் அது நன்றாக இருக்கும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஊருனினுடைய தோற்று ஜாதகம் இருக்கிறதல்லவா, ஊர் தோன்றியது, அங்கு என்னென்ன காவல் தெய்வங்கள் இருக்கிறது என்பதனைப் பார்த்துவிட்டு அதற்கான பரிகாரங்களைச் செய்வது நல்லது. அந்தப் பகுதியில் எதாவது காவல் தெய்வங்கள் அய்யனார், முனீஸ்வரர், கருப்பசாமி அல்லது துரோபதி அம்மன் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு அதற்கான பரிகாரத்தை செய்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil