Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆங்கிலப் புத்தாண்டு (2010) சந்திர கிரகணத்தில் பிறப்பதால் பாதிப்பு ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஆங்கிலப் புத்தாண்டு (2010) சந்திர கிரகணத்தில் பிறப்பதால் பாதிப்பு ஏற்படுமா?
, செவ்வாய், 17 நவம்பர் 2009 (12:59 IST)
கிரகணங்களால் நன்மை என்று ஒருபோதும் கூறமுடியாது. அவற்றால் எப்போதும் தீமைதான். 2010 ஆங்கிலப் புத்தாண்டு சந்திரக் கிரகணத்தில் பிறக்கிறது. அதன் பின்னர் ஒரு சில நாட்களில் சூரிய கிரகணமும் ஏற்படுவதால் உலக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அடுத்தடுத்து 2 கிரகணங்கள் நிகழும் போது பாதிப்பு ஏற்படுவது இயற்கையானது என்று ஏற்கனவே கிரகணம் தொடர்பான கேள்விகளில் பதிலளித்துள்ளோம்.

ஆங்கிலப் புத்தாண்டில் ஏற்படும் இரட்டை கிரகணங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு சவால், நாட்டை ஆள்பவர்களுக்கு இழப்பு, இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றம், விளை பொருட்களுக்கு தட்டுப்பாடு, உலக மக்களிடையே மனிதாபிமானமற்ற நிலை போன்றவை ஏற்படும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய அறிவாளிகள் (மாஸ்டர் பிரெய்ன்) கடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

குறுக்கு புத்திக்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கும். பெயர் தெரியாத அல்லது கண்டுபிடிக்க முடியாத நோய்கள் பரவும் ஆகியவை 2010 சந்திர கிரகணத்தால் ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil