Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலைப் பயணத்தில் கோயிலை கடக்கும் போது சாமி கும்பிடுவது முறையா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2009 (18:39 IST)
இன்றைய அவசர உலகில் பலரால் தினமும் கோயிலுக்கு செல்ல முடிவதில்லை. ஆனால் அலுவலகம் செல்லும் போது வழியில் உள்ள ஆலயங்களைக் கடக்கும் தருணத்தில் கடவுளை நினைத்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்?

கோயிலுக்குள் சென்று இறைவனுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர் முன் நின்று பிரார்த்திப்பதற்கு பதிலாக சாலையில் போகிற போக்கில் கோயில் கோபுரத்தை மட்டும் பார்த்து வணங்கி விட்டு செல்வது தெய்வத்தை அவமதிப்பது போல் ஆகாதா?

பதில்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, தூரத்தில் இருந்தோ அல்லது பயணத்தின் போது கோபுரத்தை பார்த்து இறைவனை மனதில் நினைத்து தரிசித்தால் அதற்கும் உண்டான பலன் கிடைக்கும்.

நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்...
அன்பே மஞ்சன நீர்; பூசை கொள்ள வாராய் பராபரமே...

என்று தாயுமானவர் பாடியுள்ளார். மனதிற்கு உள்ளேயே ஈசனை நினைத்து வழிபடும் போதுதான் இந்தப் பாடலை அவர் பாடினார். இதுபோல் இறைவனை உண்மையாக மனதில் நினைத்து 10 நொடிகள் வணங்கினாலும் அதற்கான பலன் உண்டு. திருவண்ணாமலை போன்ற கோயில்கள் நினைத்த உடனேயே முக்தி தரும் ஸ்தலங்கள் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இருக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனம் இறைவனை நினைத்து வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். பயணத்தின் போது இறைவனை வணங்கினாலும் முழு மனதுடன் வணங்க வேண்டும். பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை அடித்துக் கொண்டு பெயருக்கு கன்னத்தில் போட்டுக் கொள்வதால் நிச்சயம் எந்தப் பலனும் கிடைக்காது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments