Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதச் சனி காலத்தில் நல்லது நடக்குமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
ஜோதிடத்தில் ஏழரைச் சனி (7.5 ஆண்டு) காலகட்டத்தை 3 பிரிவாகப் பிரித்துள்ளனர். இதில் முதல் இரண்டரைக் ஆண்டுகள் விரயச் சனி என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி என்றும், கடைசி இரண்டரை ஆண்டு பாதச்சனி என்றும் அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் ஒரு இடத்தில்/வீட்டில் இருந்து விலகும் போது ஏதாவது ஒரு நன்மையைச் செய்து விட்டுப் போகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில் “பெரும் சனி, பாம்பு இரண்டும் பிற்பலன் செய்யும ் ” என்று பாடல் உள்ளது. எனவே, சனி, ராகு, கேது ஆகியோர் (தங்களது தசாபுக்தி காலத்தில்) பிற்பலன் செய்வார்கள்.

இதில், பாதச் சனியைப் பொருத்தவரை நல்லது, கெட்டது என இரண்டுமே நடக்கும். ஒரு சிலருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரலாம். உயிர் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட ஜாதகர் பிறக்கும் போது சனி எங்கே, எப்படி இருந்தது என்பதை வைத்தே இதனைக் கணிக்க முடியும்.

ஆனால், விரயச் சனி, ஜென்ம சனியைக் காட்டிலும் பாதச் சனி காலத்தில் நன்மைகள் நடக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments