Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தாண்டு பருவமழை எப்படி இருக்கும்?

இந்தாண்டு பருவமழை எப்படி இருக்கும்?
, புதன், 24 ஜூன் 2009 (18:09 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் துவங்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் கூட பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே நின்று விட்டது.

தற்போது தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாக கர்நாடகத்தில் கனமழை பெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மும்பை, குஜராத்தில் கனமழை பெய்தால்தான் நாட்டின் நீர்தேவை பூர்த்தியாகும். இந்தாண்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதா?

பதில்: ஜோதிடத்தைப் பொறுத்த வரை கடகம், மகரம், மீனம் ஆகியவை ஜல ராசிகள்/வீடுகள் ஆகும். தற்போது கடகத்தில் கேதுவும், மகரத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர். மீனத்திற்கு சொந்தமான குரு, மலை வீடு என்று கூறப்படும் கும்பத்தில் அமர்ந்துள்ளார். இதன் காரணமாகவே குறிப்பிட்ட காலத்தில் மழை பெய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மகரத்தில் உள்ள குரு, ஆகஸ்ட் 3 முதல் மகரத்திற்கு வருகிறார். ஜல வீட்டிற்கு குரு வருவதால் அன்றைய தினம் முதல் மழை நன்றாகப் பெய்யும்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை சுக்கிரன் மழைக்கோள் என்று அழைக்கப்படுகிறது. அந்த மழைக்கோள் ஜூன் 29ஆம் தேதி சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் அன்றைய தினம் முதலே மழையை எதிர்பார்க்கலாம்.

ஜூலை 9ஆம் தேதி சுக்கிரன் ரோகினி நட்சத்திரத்திற்கு செல்கிறார். அந்த தினம் முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்தாண்டு மழை பெய்வது நிச்சயம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

எனினும், குரு அடிக்கடி வக்ரமாகி அதிசாரத்தில் செல்வதால் காலத்தே மழை பெய்யாமல், காலம் கடந்து மழை பெய்யும் நிலை உருவாகும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 3 மாவட்டங்களிலும் குறுவை சாகுபடி இந்தாண்டு எப்படி இருக்கும்?

பதில்: இந்த மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் ஒருபோகம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அங்குள்ள விவசாயிகளில் பாதிப்பேர் சாகுபடி செய்தனர், மீதமுள்ளவர்கள் நெல் நடவில்லை என்று கூறும் நிலை காணப்படலாம்.

ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் சுமாரான அளவு மழையும் பெய்யும் என்பதால் சாகுபடியில் சுணக்கம் ஏற்படலாம். எனினும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு குறைவிருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil