Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது? இது எப்படி சாத்தியமானது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
சனி, 23 மே 2009 (18:43 IST)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் சனி வலிமையாக அமையப் பெற்றவர்கள் இந்தத் தேர்தலில் சாதித்துள்ளனர்.

சோனியாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் ராகு/கேதுவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவர் மிதுன ராசி. லக்னத்திற்கு 2வது வீட்டில் ராகு, 8வது வீட்டில் கேது. பொதுவாக இருப்பதை மறைப்பதே சாயா கிரகங்களான ராகு/கேதுவின் தன்மை.

ஆனால் அதையும் தாண்டி சோனியா இந்தத் தேர்தலில் சாதித்துள்ளதற்குக் காரணம் சனியின் ஆதிக்கம். அதிசாரத்தில் உள்ள குரு, சனியின் பார்வையால் நீச்சமடைந்து தன்னுடைய சுபத்தன்மையை இழந்து விட்டார்.

இதன் காரணமாக அவர் இன்னொரு சனியாகவே மாறி விட்டார் என்று சொன்னால் மிகையில்லை. குருவின் பார்வையால் சனியின் சக்தி மேலும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஆளும் தலைவருக்கு ரிஷப ராசி; இந்த ராசிக்கு சனி பிரபல யோகாதிபதி. அவருக்கு அதிசார குரு 10ஆம் இடத்திற்கு சென்றது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை “10இல் குரு பதவியைக் கெடுக்கும ் ” என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால், 10ஆம் இடத்திற்கு சென்ற குரு, அந்த இடத்திற்கு உரிய பலனை வழங்காமல், 9ஆம் இடத்திற்கான பலன்களையே வழங்கியுள்ளது. இதற்கு முழு முதற் காரணம் சனியின் ஆதிக்கம்.

வரும் செப்டம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அப்போது நிலைமைகள் மாறும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments