Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (12:38 IST)
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்:
விரோதி வருடப் பிறப்பில் பெண் ஆதிக்க கிரகங்கள் வலுவாக உள்ளன. விரோதி ஆண்டிற்கு சுக்கிரன் ராஜாவாகவும், சந்திரன் மந்திரியாகவும் உள்ளனர்.

சுக்கிரன், சந்திரன், ராகு ஆகிய 3 கிரகங்களும் பெண் ஆதிக்க கிரகங்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. பெண் ஆதிக்க கிரகங்கள் வலுவடைவதால் பெண்கள் அதிக வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஆட்சியில் இருப்பவர்களை விட எதிர்க்கட்சியாக செயல்படும் பெண்கள் கூடுதல் வெற்றிகளை ஈட்டுவர்.

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஒரு கூட்டணியே வெற்றி பெறுவது என்பது தற்போதய கிரகநிலை சூழலில் சாத்தியமில்லை. வாக்குப்பதிவு பூராடம் நடத்திரத்தில் நடப்பதால் ஒரு தரப்பினருக்கு 75% மற்றவருக்கு 25% என்ற ரீதியான முடிவுகளை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பு வரை ஒரு வகையான ஆதரவும், பிரசாரம் நிறைவடைந்த பின்னர் மற்றொரு வகையான ஆதரவும் காணப்படும் என்பதால் இறுதி முடிவை முதலிலேயே கணிக்க முடியாது. பூராடம் நட்சத்திரம் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும ் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நட்சத்திரம்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு விரோதி வருடம் எதிர்மறையான பலன்களையே அளிக்கும். எதிர்பார்த்த இடங்களுக்கும் குறைவான வெற்றியே கிடைக்கும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments