Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப் புத்தாண்டிற்கு ‘விரோதி’ எனப் பெயரிட்டது ஏன்?

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2009 (09:53 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
ஒவ்வொரு வருடத்தின் பெயருக்கும் காரணங்கள் உண்டு. அந்த வகையில் ‘விரோத ி ’ வருடம் மக்களிடையே விரோத மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் விரோதி ஆண்டுக்கான கிரக நிலை அப்படி.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சேனாதிபதி, ராஜா, மந்திரி என கிரகங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். அதன்படி விரோதி வருடத்திற்கு ராஜாவாக சுக்கிரன், மந்திரியாக சந்திரன் வருகிறார். சுக்கிரன்-சந்திரன் (மனோகாரகன்) பகையான கிரகங்கள் என்பதால் மக்கள் மனதில் பகை உணர்வு உண்டாகும். அவர்கள் (மக்கள்) மேலேயே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். இதன் காரணமாக தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும்.

கடந்த 10, 15 ஆண்டுகளாக மனதளவில் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள் கூட பிரிய வேண்டிய சூழல் உருவாகும். குரோதங்கள், போட்டி பொறாமை எண்ணங்களையும் விரோதி வருடம் உருவாக்கும் என்பதால் இந்த ஆண்டிற்கு விரோதி எனப் பெயரிட்டுள்ளனர்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments