Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-நியூஸீலாந்து கிரிக்கெட் தொடர்: வெற்றி யாருக்கு?

இந்தியா-நியூஸீலாந்து கிரிக்கெட் தொடர்: வெற்றி யாருக்கு?
, வியாழன், 5 மார்ச் 2009 (14:02 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

இந்தியா-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெற்றி யாருக்கு என்ற கேள்வியுடன் எமது ஜோதிடரை அணுகினோம்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த ஒருநாள் போட்டியின் முடிவுகள் குறித்து ஜோதிடர் அளித்த பதில்:

மார்ச் 6ஆம் தேதி நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்பு காணப்படுகிறது.

மார்ச் 8ஆம் தேதியன்று நடக்கும் மூன்றாவது ஒருநாளில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. நூலிழையில் இந்தியா தோல்வியடையவும் வாய்ப்பு காணப்படுகிறது.

மார்ச் 11ஆம் தேதியன்று நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மார்ச் 14ஆம் தேதி நடக்கும் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதேபோல் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் ஜோதிடர் கணித்துள்ளார்.

மார்ச் 18 முதல் 22ஆம் தேதி வரை நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மார்ச் 26 முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் 2வது டெஸ்ட் போட்டி, ஏப்ரல் 3 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இரு அணிகளுக்குமே சமமான வாய்ப்பு உள்ளதால் போட்டி ‘டிர’வில் முடியலாம் என ஜோதிடர் கணித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil