Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் விலை குறையும் என்று கூறியிருந்த நிலையில், அது தொடர்ந்து உயர்ந்து வருகிறதே?

ஜோதிட முனைவர் க.ப.வித்யாதரன்:

தங்கம் விலை குறையும் என்று கூறியிருந்த நிலையில், அது தொடர்ந்து உயர்ந்து வருகிறதே?
, சனி, 28 பிப்ரவரி 2009 (18:13 IST)
வாசகர் கேள்வி: கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதிக்குப் பின்னர் குரு நீச்சமடைவதால் தங்கம் விலை குறையும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் தற்போதைய நிலையில் நீங்கள் கூறியதற்கு நேர் மாறாக தங்கம் விலை வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளதே? இது ஏன்? தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளதா?

பதில்: பணம், தங்கத்திற்கு உரிய கிரகம் குரு. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் குரு நீச்சமடைந்த போது தங்கம் விலை சரிந்ததும், சில வங்கிகள் மூடப்பட்டதும் மக்களுக்கு தெரிந்த உண்மை.

ஆனால் அப்போது சனி இருந்த அமைப்பு வேறு மாதிரியாக இருந்தது. சனியை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் கனிம, கரிம வளங்களுக்கு அதிபதி அவர்தான். அந்த வகையில் கனிம, கரிம வரிசையில் வருவதால் தங்கமும் சனிக்கு உட்பட்டதாகவே கருத வேண்டும்.

தற்போது சனி வலுவாக சிம்மத்தில் அமர்ந்துள்ளது. இதுபோன்ற காலகட்டத்தில் பொது மக்களுக்கு ஏதாவதொரு வகையில் சனி இடர்பாடுகளை ஏற்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் அநியாய விலையேற்றத்தை அதிகப்படுத்துவார்.

தற்போதைய நிலவரப்படி சனியின் வீட்டில் குரு நீச்சமாகியிருந்தாலும், சூரியனின் வீட்டில் (சிம்மம்) சனி உச்சமாகியிருப்பதன் காரணமாக தங்கம் விலையில் குறுகிய காலத்தில் கடும் ஏற்றம் நிகழ்ந்தது.

வரும் மே மாதம் 2ஆம் தேதி முதல் சிம்மச் சனியின் பார்வையில் குரு வருவதால் அப்போது தங்கம் விலை மீண்டும் குறையும். அந்தக் காலத்தில் குருவும் வக்கிரமடைகிறார்.

ஆனால் தற்போது குரு நீச்சமடைந்திருந்தாலும், அவருடன் செவ்வாய் உள்ளிட்ட சில கிரகங்கள் உடன் இருந்து வருகின்றன. இதன் காரணமாக குரு முழுமையாக நீச்சம் அடையாமல் இருந்து வருகிறார். வரும் மார்ச் 6ஆம் தேதி குருவிடம் இருந்து செவ்வாய் விலகுகிறார். அப்போது முதலே தங்கத்தின் விலை குறையத் துவங்கும்.

எனினும், குரு நீச்சமாகியுள்ளதால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil