வாசகர் கேள்வி: நான் தற்போது சொந்த வீட்டில் இருந்து வருகிறேன். சமீபத்தில் நான் கண்ட கனவில் என் வீட்டிற்குள் ஏராளமான கருநாகப் பாம்புகள், தேள், பூரான் உள்ளது போல் காணப்பட்டது.
பதில ்: பொதுவாக கனவில் பாம்புகளைப் பார்ப்பது சிறப்பான விடயம்தான். அதிலும் கருநாகப் பாம்புகளைப் பார்ப்பது மிகவும் சிறப்பானது. அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது. ஆனால் பாம்புடன், தேள், பூரான் போன்ற உயிரினங்களை கனவில் கண்டால் அந்த வீட்டில் எதிர்மறைக் கதிர்கள் உள்ளதாகக் கொள்ளலாம்.
இதற்கு பரிகாரமாக தண்ணீரில் பசுவின் சாணத்தைக் கரைத்து வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்குள் தெளிக்கலாம். நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தால் சாணத்தை சிறு உருண்டையாக உருட்டி பூஜை அறையில் விளக்கிற்கு அடிப்பகுதியில் வைத்து அதன் மீது விளக்கு ஏற்றலாம்.
இதனைச் செய்வதுடன், குல தெய்வத்திற்கு ஏதாவது நேர்த்திக் கடன் (குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபடுவது உள்ளிட்டவை) செய்தால் உடனடியாகப் பலன் பெறமுடியும்.