இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சரிவர விளையாடாத காரணத்தால் அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சூழலில் திராவிட் எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்விக்கு எமது ஜோதிடர் க.ப.வித்யாதரன் அளித்த பதில்:
ஜனவரி 11, 1973இல் பிறந்த திராவிட்டின் நட்சத்திரம்-உத்திரட்டாதி, ராசி-மீனம். ஜாதக ரீதியாக பார்க்கும் போது தற்போதைய காலகட்டம் அவருக்கு ஏதுவாக உள்ளது. எனவே, 2009 ஏப்ரல், மே மாதங்களில் அவர் ஓய்வு பெறலாம். அப்படி இல்லாதபட்சத்தில் 2009 இறுதியில் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம்.
வரும் 2010ஆம் ஆண்டு இந்திய அணியில் திராவிட் இடம்பெறுவது கடினம்.