Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (18:20 IST)
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் இத்தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற கேள்வியுடன் எமது ஜோதிடர் க.ப.வித்யாதரனைச் சந்தித்தோம்.

கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள், சுயேச்சைகள் என்று யாருடைய ஜாதகமும் நமக்குக் கிடைக்கவில்லை. பெயரை வைத்துப் பார்க்கும் போது லதா அதியமான் மேஷ ராசிக்குள் வருகிறார். அந்த ராசிக்கு 10இல் குரு வருகிறார். செவ்வாய், சூரியன் ஆகியவையும் சிறப்பாக இல்லை. தேர்தல் தேதியை வைத்துப் பார்க்கும் போதும் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு மேற்கூறிய விடயங்கள் சாதகமாக காணப்படுகிறது. தேர்தல் தேதியன்று அ.தி.மு.க. தலைமைக்கும் சாதகமாக இருப்பதால், முத்து ராமலிங்கத்திற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments