Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌ந்து தான‌ம் : பூ‌ர்வ ஜெ‌ன்ம தொட‌ர்பு - ஜோ‌திட‌‌ர்!

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

Webdunia
விந்து தானம் செய்வதால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஜோதிட ரீதியாக ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா?

உலகளவில் பெண் குழந்தைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற கட்டுரையில், ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் இரண்டு அல்லது மூன்று பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை உருவாகாது. அப்படி உருவானால் தவறாக உருவாகும் எனக் கூறியிருந்தீர்கள்.

அதிலும் உண்மையான தகப்பன் (விந்தை விட்டவன்) எங்காவது நொந்து போய் கிடப்பான் அல்லது இறந்திருப்பான், தற்போது தந்தை என்று கூறப்படுபவர் அக்குழந்தையை பாதுகாவலனாக மட்டுமே இருப்பார் என்றும் கூறியிருந்தீர்கள்.

இதனை வேறு கோணத்தில், அதாவது விந்து சேகரிப்பு வங்கிகளில் சிலர் விந்து தானம் செய்யும் போது அதன் மூலம் உருவாகும் குழந்தையால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா?

விந்து தானம் செய்யும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் ரீதியான தொடர்பு இல்லாவிட்டாலும், பூர்வ ஜென்ம தொடர்புள்ள இடத்தில்தான் அந்த விந்து சேர்ந்து, மறுபடியும் அந்த வீட்டில் குழந்தை வளரும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

ஜோதிட ரீதியாக இது பூர்வ ஜென்ம தொடர்பை வலுப்படுத்தும் விஷயமாகவே கருதப்படுகிறது. உதாரணமாக அயல்நாட்டில் உள்ள ஒரு பெண்மணிக்கு இந்தியாவில் உள்ள விந்து வங்கியில் இருந்து விந்து சென்றிருக்கும். அந்த விந்துக்கு உரிய நபர் போன ஜென்மத்தில் பிரான்ஸில் பிறந்திருக்கும் சாத்தியமுண்டு. இந்த ஜென்மத்தில் அவர் இந்தியாவில் இருந்தாலும் அவரது பூர்வ ஜென்ம பிறப்பிடத்திற்கு அது ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

அதனால் பூர்வ ஜென்மத்து தொடர்புடைய இடம் அல்லது பூர்வ ஜென்ம சம்பந்தம் உள்ள நபர்களிடமே அது போய் சேர்ந்து குழந்தை பிறக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும், விந்தணு என்று எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு விஷயங்கள் உள்ளது. தற்போது சனி சிம்மத்தில் உள்ளதால் மனிதனை அடித்து மனிதனே சாப்பிடுவது, நம்பிக்கை துரோகம், முறையற்ற புணர்ச்சி ஆகியவற்றில் ஆதிக்கம் அதிகரிக்கும். அதனால்தான் புனிதமானது என்று கருதும் விஷயங்கள் கூட இன்று வியாபாரமாக மாறி விட்டது.

ஆனால் சனியால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் ஒருபக்கம் தீமையில் முடிந்தாலும், மறுபுறம் அதனால் நன்மையும் ஏற்படும். ஒருசாராருக்கு தீங்கு, ஒருசாராருக்கு நன்மை என்று கூறலாம். குழந்தை பாக்கியத்தை நினைத்தே பார்க்க முடியாத சிலருக்கு விந்து தான முறையால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே, விந்து தானத்தை தவறு என்று கூறிவிடவும் முடியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments