ஜோதிடப்படி கர்நாடகம் என்றாலே கருநாகம்தான், அதாவது ராகுவின் ஆதிக்கத்தில் உள்ள மாநிலம் அது. ராகு சனியின் பார்வையில் இருக்கிறது. அதனால் கர்நாடகம் பாதிக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.
தற்போது ராகு - கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால் அதன்பிறகு இந்த பிரச்சினை வலுக்கும். டிசம்பர் 6 ராகுவுடன் குரு சேர்கிறது. அதன்பிறகுதான் இந்த பிரச்சினையில் அமைதி ஏற்படும்.
அதுவரை இந்த பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். வரும் 9ஆம் தேதிக்குப் பிறகு பிரச்சினை தீர்வது போல் இருந்து பின்னர் விஸ்வரூபம் எடுக்கும்.
ஒகேனக்கல் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிதான் டிசம்பருக்குப் பிறகு தீர்வை அடையும்.
அரசியல் காரணத்தினால்தான் இந்த பிரச்சினை எழுகிறதா?
அரசியல் காரணம் என்று சொல்லிவிட முடியாது, நதிகளுக்காகத்தான் இந்த பிரச்சினை. நதிகளுக்கு உரியவன் சந்திரன். சுக்கிரன் என்றும் சில நூல்கள் கூறுகின்றன.
இதையெல்லாம் பார்க்கும் போது 12 வீடுகளில் கடகம், மீனம், மகரம் ஆகியவைதான் தண்ணீர் வீடுகள். தற்போது இந்த தண்ணீர் ராசிகளுக்குத்தான் ராகு வருகிறது. எனவேதான் தண்ணீரால் பிரச்சினைகள் ஏற்படும்.
நதிநீர் பங்கீடு, நீர்வீழ்ச்சி, அருவிகள் போன்ற இடங்களில் பிரச்சினை இருக்கும்.