பொதுவாக அஸ்வினி, பரணி நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டாலே தீ விபத்து, கார் விபத்து, ரயில் விபத்து போன்றவை ஏற்படும். சாதாரண ஒரு சின்ன சண்டையில் கொலை செய்து விடுதல் போன்றவை ஏற்படும்.
அதனால்தான் அந்த காலத்தில் எல்லாம் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய மூன்று நட்சத்திர நாட்களிலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அமைதியாக இருந்து விடுவார்கள். எந்த காரியத்தையும் ரோகிணியில் இருந்துதான் துவக்குவார்கள்.
இந்த மூன்று நட்சத்திரங்களும் ராட்சச குணங்களைத் தரக்கூடியவை. பிடிவாதம், வாக்குவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
அந்த நட்சத்திரங்கள் வரக்கூடிய கிழமையை வைத்துப் பார்க்கும்போது அதன் அசுரத் தன்மையை கண்டறியலாம். அஸ்வனி, பரணி நட்சத்திரங்கள் புதன், வியாழக் கிழமைகளில் வந்தால் அதன் தாக்கம் குறையும்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய் போன்றவற்றில் வந்தால் பயங்கரமானதாக வரும்.
தற்போது அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்கள் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வந்துள்ளது. எனவேதான் இதுபோன்ற பயங்கர விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திர நாட்களில் கோபப்படுதல் அதிகமாக இருக்கும். எனவே அந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.