Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப்ரவ‌ரி மாத எண் ஜோதிடம் : 6, 15, 24

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (18:52 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர் விடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசுப் பணம் புரளும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பேசில் கம்பீரம் பிறக்கும்.

உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படு‌ம்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது நபர்களின் சந்திப்பு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சியுண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 9, 15, 18, 24, 27
அதிர்ஷ்ட எண்கள் : 6, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments